வேலம்மாள் கல்வி குழுமம் வரி ஏய்ப்பு புகார் : 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

வேலம்மாள் கல்வி குழுமம் தொடர்புடைய இடங்களில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனிதனி குழுக்களாக பிரிந்து நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

By: Updated: January 22, 2020, 09:40:15 AM

வேலம்மாள்  கல்வி குழுமம் வருமான வரி செலுத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித் துறைக்கு தகவல் வந்தது. கல்வி குழுமம் தாக்கல் செய்த வருமான வரி கணக்குளை ஆய்வு செய்த வருமான வரித் துறையினர், வரிஏய்ப்பு நடந்திருப்பதை உறுதி செய்தது.

இதனையடுத்து வேலம்மாள்  கல்வி குழுமம் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனிதனி குழுக்களாக நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சில முக்கிய சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும்,   கல்வி நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகள் குறித்து முழுமையான ஆய்வுகள் நடத்தப்படும் என்று வருமானவரித் துறையினர் தெரிவிகின்றனர்.


இதனிடையே, வேலம்மாள் கல்வி குழுமத்தில் 2வது நாளான  இன்றும் வருமான வரி துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலம்மாள் கல்வி குழுமம்:  

1986ம் ஆண்டு சென்னையில் முகப்பேரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய பள்ளியிலிருந்து, வேலம்மாள் கல்வி நிறுவனம் தமிழ்நாட்டின் திருவள்ளூர், காஞ்சீபுரம், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் கருர் ஆகிய மாவட்டங்களுக்கு பரவியுள்ளன.

வேலம்மாள் கல்வி குழுமத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Income tax raids in velammal educational trust continues for second day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X