Advertisment

சென்னை ஐஐடி-யில் 104 பேருக்கு கொரோனா: அனைத்து மாணவர்களையும் பரிசோதிக்க உத்தரவு

IIT Madras Lockdown கடந்த இரண்டு வாரங்களில் இங்கு 71 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன.

author-image
WebDesk
New Update
Increased Covid cases in IIT Madras under Temporary Lockdown Tamil News

IIT Madras under Temporary Lockdown

IIT Madras under Temporary Lockdown Tamil News : 2020-ம் ஆண்டு முழுவதும் தொற்றுநோய் பரவல், அதனால் எதிர்கொண்ட விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக லாக்டவுன் என கொரோனாவைச் சுற்றியே நாள்கள் கழிந்தன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி மெட்ராஸுக்குள் கொரோனா வைரஸ் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், வளாகம் தற்காலிகமாக லாக்டவுனில் உள்ளது. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த இரண்டு வாரங்களில் இங்கு 104 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 66 மாணவர்கள், நான்கு பேர் உணவாக ஊழியர்கள் மற்றும் அங்குக் குடியிருப்பாளர்களில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை 32 புதிய வழக்குகளுடன் இருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்பதைக் கருத்தில்கொண்டு, வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சோதிக்குமாறு தமிழக அரசு நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

சென்னையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய தமிழக சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், “நாங்கள் இதுவரை 447 மாதிரிகள் எடுத்துள்ளோம். பாசிட்டிவ் விகிதம் இப்போது சுமார் 20 சதவிகிதமாக உள்ளது. மக்கள் பீதியடையத் தேவையில்லை. நாங்கள் விரைவாக சோதனை செய்து பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறோம்" என்று கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது.

"அண்மையில் விடுதி பகுதியில் கோவிட் வழக்குகள் அதிகரித்ததைக் கருத்தில் கொண்டு, மேலும் அறிவிப்பு வரும் வரை அனைத்து துறைகள், மையங்கள் மற்றும் நூலகத்தை உடனடியாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் இந்தக் காலகட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள். வளாகத்தில் தங்கியுள்ள அனைத்து மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை தங்கள் விடுதி அறைகளிலேயே இருக்குமாறும், தங்கள் சொந்த பாதுகாப்புக்காக எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியை கடுமையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கோவிட் தொற்றுநோயின் அறிகுறிகள் இருந்தால் (காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, சுவை / வாசனை இழப்பு அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகள்) நீங்கள் உடனடியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் மருத்துவமனை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.

தீவிர பரவுதலைக் கட்டுப்படுத்த ஐ.ஐ.டி மெட்ராஸுடன் சுகாதார அதிகாரிகள் இணைந்து வேலை செய்கிறார்கள் என்று சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். "இந்த வகையான உள்ளூர் மயமாக்கப்பட்ட குழுக்கள் எதிர்பார்க்கப்பட்டதுதான். மாணவர்கள் ஒன்றிணைந்த பொதுவான உணவகம்தான் காரணம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மேலும், உணவகங்களை மூடிவிட்டு உணவை நேரடியாகக் குடியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினோம். அனைவருக்கும் சோதனைகளை நடத்துமாறு நிறுவனத்திடம் கேட்டுள்ளோம். ஹாட்ஸ்பாட்களை கிருமி நீக்கம் செய்யச் சென்னை கார்ப்பரேஷன் அவர்களுக்கு உதவும்" என்று ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஒன்பது மாணவர் விடுதிகளும் ஒரு விருந்தினர் மாளிகையும் உள்ளன. இங்கிருந்துதான் கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 774 மாணவர்கள் தற்போது வளாகத்தில் வசித்து வருகின்றனர். அவர்களில் 408 மாணவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. கிருஷ்ணா விடுதியில் அதிகபட்சமாக 22 கோவிட் வழக்குகளும், ஜமுனாவிலிருந்து 20 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

"உணவகம் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வழக்குகள் ஆகியவை காரணங்களாக அடையாளம் காணப்படுகின்றன. மாஸ்க், கை கழுவுதல், சமூக விலகல் மற்றும் பிற நிலையான நடைமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன. ஐ.ஐ.டி மெட்ராஸ் நிர்வாகம் அனைத்து ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துகிறது மற்றும் நிலையான இயக்க முறையைப் பின்பற்றுகிறது" என்று ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மிக நீண்ட காலமாக செயல்பாட்டில் ஒரே ஒரு உணவகம் மற்றும் நூற்றுக்கணக்கான குடியுரிமை பெற்ற மாணவர்களை விடுதிகளை காலி செய்ய வைத்தது போன்ற ஐ.ஐ.டி மெட்ராஸ் நிர்வாகத்தின் முடிவுதான் இந்த நெருக்கடிக்கு வழிவகுத்தது என்று அங்கிருக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

"தற்போது, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களைவிட விடுதிகளில் அல்லாத மாணவர்கள்தான் அதிகமாக உள்ளனர். தினசரி பலரும் உள்ளேயும் வெளியையும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் யாரால் நோய்த்தொற்று பரவியுள்ளது என்பது கண்டுபிடிப்பது கடினம்" என்று ஓர் மருத்துவர் கூறுகிறார்.

விடுதிகளில் வசிக்கும் சில மாணவர்களால் அறிகுறி வழக்குகள் அதிகரித்தவுடன், குடிமை அதிகாரிகளிடம் நிறுவனம் ஆலோசனை நடத்தியது மற்றும் வசிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கோவிட் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. எச்சரிக்கையாக இருக்க, அனைத்து மாணவர்களும் தங்கள் அறைகளில் தங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி வேலைகளைச் செய்ய வேண்டிய ஆராய்ச்சி அறிஞர்களை 14 நாள் தனிமைப்படுத்தல் மற்றும் திரும்பி வருபவர்களை சோதனை செய்வது  போன்ற எச்சரிக்கையுடன் வளாகத்திற்குத் திரும்ப அனுமதிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Coronavirus Lockdown Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment