Advertisment

கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: தாய் மரணம்

இந்த வழக்கு பொய்யானதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆழ்கியுள்ளதாகவும், தனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடக்க கூடாது

author-image
WebDesk
New Update
கோவையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: தாய் மரணம்

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழிலதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Advertisment

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா (45). தொழிலதிபரான இவர் தனியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்த நிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவருமான பிரசன்னா (41) என்பவர் அறிமுகமானார்.

அவர் இடம் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியதாக தெரிகிறது. அதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ரூ.25 லட்சத்து 59 ஆயிரத்து 200 கொடுத்ததாக தெரிகிறது. மேலும், மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இட பிரச்சினையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்ய முயன்று உள்ளார்.

இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி (31), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (28), பிரகாஷ் (58) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர். இது குறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று பிரசன்னா உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தன்னுடைய குடும்பத்துடன்(4பேர்) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர். அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பிரசன்னாவின் தயார் சிகிச்சை பலனின்றி உரிழந்ததாக கூறப்படுகிறது.மேலும்  3"பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இந்த வழக்கு பொய்யானதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆழ்கியுள்ளதாகவும், தனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடக்க கூடாது தற்கொலை செய்யப் போவதற்கு முன்பு வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

ரகுமான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment