Advertisment

அதிகாரம் மிக்க 100 பேரில் தமிழர்கள் யார், யார்? இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியல்

தேசிய அளவிலான பட்டியலில், தமிழ் நாட்டைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், தொழிலதிபரான ரோசினி நாடார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், டி.வி.சோமநாதன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிகாரம் மிக்க 100 பேரில் தமிழர்கள் யார், யார்? இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியல்

இந்தியாவின் அதிகார பலம் மிக்க முதல் நூறு நபர்களின் பட்டியலை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேசிய அளவிலான ஊரடங்கு கடந்த வருடம் முழுவதும் நடைமுறையில் இருந்ததால், அனைத்து வகையான செயல்களும் முடக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள, தேசிய அளவிலான அதிகாரம் மிக்க நூறு நபர்களின் பட்டியல் 2019-ம் ஆண்டின் அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தேசிய அளவிலான பட்டியலில், தமிழ் நாட்டைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், தொழிலதிபரான ரோசினி நாடார், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், டி.வி.சோமநாதன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி :

அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக பதவி வகித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. உள்கட்சி பூசலால், ஆதரவு இழந்துவிடுவார் என பல அரசியல் கருத்துகள் நிலவிய நிலையில், தனது அரசியல் வியூகங்களால் ‘மண்ணின் மைந்தன்’ என்ற அடையாளத்துடன் முதல்வர் வேட்பாளராக களம் காண்கிறார். நாட்டின் அதிகாரமிக்க தலைவர்களில் 43-வது இடத்தைப் பெற்றுள்ளார் பழனிச்சாமி. சசிகலாவுக்கு எதிராக கட்சியில் நிலைபெறுவதற்கு,முக்கியமான தேர்தலாகவே எதிர்வரும் தேர்தல் அவருக்கு இருக்கும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் :

publive-image

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகவும் உள்ள மு.க.ஸ்டாலின், இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அதிகாரமிக்க தலைவர்களின் பட்டியலில் முப்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். பல குடும்ப சர்ச்சைகளை அடுத்து, கருணாநிதியின் அரசியல் வாரிசாக சிம்மானத்தை அடைந்தவர் ஸ்டாலின். சென்னை மாநகராட்சியின் மேயராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்த காலங்களில், தனது திறமையினால் சிறப்பான நிர்வாகி என்ற புகழைப் பெற்றவர் ஸ்டாலின் என்பது குறிப்ப்டத்தக்கது. கடந்த தேர்தலில், சிறிய வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஸ்டாலினுக்கு எதிர்வரும் தேர்தல் அவரது அரசியல் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம் ஆகும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் :

publive-image

நாட்டின் 29-வது அதிகாரமிக்க தலைவராக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பிடித்துள்ளார். சக்திகாந்த தாஸ், வெங்கிடராமனுக்கு அடுத்ததாக, பொருளாதார நிபுணர் அல்லாத நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பு வகித்து வருவது முக்கியத்துவம் பெறுகிறது. கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக முடங்கிக் கிடந்த இந்தியப் பொருளாதாரத்தை, ரிசர்வ் வங்கி ஊழியர்களுடன் இணைந்து சீரான நிலைக்கு கொண்டு வந்ததில் இவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன்

பிரதம்ர் அலுவலக அதிகாரியாக பணியாற்றிய சோமநாதன் தற்போது, மத்திய நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனாவுக்கு பிறகான பட்ஜெட் செலவினங்களில் துல்லியமான நகர்வுகளை கையாண்டு, முக்கிய திட்டங்களை செயல்படுத்தியதில் முக்கியமானவர் ஆவார்.

தொழிலதிபர் ரோசினி நாடார் :

இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்.சி.எல்லின் இந்தியப் பிரிவு நியமனத் தலைவராக பதவியேற்றார், ரோசினி நாடார். 36,800 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரும் பணக்கார பெண்மணியாக இருந்து வருகிறார்.

Mk Stalin Eps Indian Express
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment