Advertisment

கிண்டி ஹோட்டலில் 85 பேருக்கு தொற்று : சென்னையில் கொரோனா 2-வது அலையா?

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் கிராண் சோலா ஹோட்டலில் நடத்தபட்ட கொரோனா பரிசோதனையில், விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
கிண்டி ஹோட்டலில் 85 பேருக்கு தொற்று : சென்னையில் கொரோனா 2-வது அலையா?

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு உலக நாடுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைளால் பாதிப்பு எண்ணிக்க சற்று குறைந்த நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தனது 2-வது அலையை வீசி வருகிறது. இதனால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

Advertisment

தொடக்கத்தில், இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ஆனாலும் நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் வரும் ஜனவரி 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை கிண்டியில் இயங்கி வரும் ஐ.டி.சி கிராண் சோலா ஹோட்டலில் கடந்த இரண்டு வாரங்களில், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட 85 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராண்ட் சோலா ஹோட்டலில், நடத்தப்பட இருந்து நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த தடை வரும் 10-ந் தேதி வரை தொடரும் எனவும், ஹோட்டலில் உள்ள அனைத்து ஊழியர்கள், விருந்தினர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் சென்னை மாநகராட்சிஅதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்த மாத தொடக்கத்தில் சென்னை ஐ.ஐ.டி- யில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அதிகபட்ச கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடாந்து 2-வது முறையாக ஐ.டி.சி ஹோட்டலில் அதிகபட்ச கொர்ரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள 605 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில்,  85 பேருக்கு பாஸிடிவ் வந்துள்ளதாக மாநகராட்சி சுகாதார ஆணையர்  திவ்யதர்ஷினி எஸ் தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட அனைவரும், தனிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உடல்நிலை குறித்து தீவிரமாக கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.டி.சி கிராண்ட் சோலா அளித்த அறிக்கையில், எங்கள் விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. நாங்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட சுகாதார நெறிமுறையையும் பின்பற்றுகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறோம். சமையலறை சுகாதாரம் மற்றும் ஊழியர்களின் வழக்கமான வேலைகளில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட சுகதார நெறிமுறைகளை எங்கள் ஊழியர்களும், விருந்தினர்களும், தவறாமல் கடைபிடித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் வசித்து வரும் பகுதியில் ஆய்வு செய்த சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன், "நாங்கள் ஒரு காய்ச்சல் முகாமை ஏற்பாடு செய்துள்ளோம். ஊழியர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கோ அறிகுறிகள் இருந்தால் அரசு பரிசோதனை மையத்தை அணுகவேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் எல்லா நேரங்களிலும் சுகாதாரம், முக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். ஹோட்டல்களில், நடைபெறும் திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்களில், கலந்துகொள்ளும், மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தத் தவறிவிடுகின்றன. என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி  எல்லையில் உள்ள மற்ற ஓட்டல் ஊழியர்களுக்கும்   கொரோனா பரிசோதனை   செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment