Advertisment

ராமநாதபுரத்தில் 35 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று - அதிர்ச்சியில் ஐ.என்.எஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ins parundu, ramanathapuram, corona for air personnel, covid 19 in ramanathapuram, ramnad covid 19 cases, ஐஎன்எஸ், 35 கடற்படை வீரர்களுக்கு கொரோனா, ராமநாதபுரம்

ins parundu, ramanathapuram, corona for air personnel, covid 19 in ramanathapuram, ramnad covid 19 cases, ஐஎன்எஸ், 35 கடற்படை வீரர்களுக்கு கொரோனா, ராமநாதபுரம்

Corona Cases in Ramanathapuram: ராமநாதபுரத்தில் இந்தியக் கடற்படை விமானப்படை தளத்தில் பணியாற்றும் 35 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, உச்சிப்புளியில் உள்ள இந்தியக் கடற்படை வீரர்கள் இடையேயும் பரவியுள்ளது.

கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவலில் தொடக்க காலங்களான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒற்றை இலக்கங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,063 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 352 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் லாக்அப் மரணம் : இறுதி சடங்கு நிறைவு.. வியாபாரிகள் இன்றும் கடையடைப்பு!

கடந்த இரு நாட்களில் மட்டும் 168 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் உச்சிப்புளி அருகே இந்தியக் கடற்படையின் 'ஐ.என்.எஸ் பருந்து' விமானத்தளத்தில் பணியாற்றும் 35 வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு 300-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் உச்சிப்புளி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் தனியார் வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் பீகார், டெல்லி, ஹரியானா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.வீரா ராகவா ராவ் தெரிவித்தார்.

பெங்களூரு சிறையில் இருந்து ஆக.14ம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா? - ஆச்சாரி ட்வீட்

கடும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வரும் ஐ.என்.எஸ் பருந்து விமானப் படைத்தளத்திற்குள் 41 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துவிட்டது.

பாதுகாப்பு வளையத்தினுள் உள்ள கடற்படை விமானத் தளத்தில் பணியாற்றுபவர்களையும் கொரோனா தொற்று பாதித்திருப்பது மாவட்ட சுகாதாரத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment