Advertisment

IRCTC.co.in-ல் நவம்பர் 3ம் தேதி தீபாவளி ரயில் டிக்கெட்கள் இன்று முன்பதிவு

IRCTC: தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க நவம்பர் 3ம் தேதி ரயில் சேவைக்காக டிக்கெட்டுகள் இன்று முன்பதிவு செய்யலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுரை வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் சென்னை அனுவ்ராத் எக்ஸ்பிரஸ்...

IRCTC: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 3 ஆம் தேதி ரயில்களில் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் பொதுமக்கள் இன்று முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த முன்பதிவு சேவை இன்று காலை தொடங்குகிறது.

Advertisment

2018ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி வருகிறது.  120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், நவம்பர் 2 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.  நேற்று காலை தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் IRCTC இணையத்தளத்தில் நவம்பர் 2ம் தேதிக்கான தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யத் தொடங்கிய 7 நிமிடத்திலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், நவம்பர் 3 ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ம் தேதிக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாதவற்கு மற்றொரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இதற்காக பொதுமக்கள் அனைவரும் காலை முதலே irctc.co.in இணையத்தளத்தில் முன்பதிவு செய்யத் தயாராக உள்ளனர்.

IRCTC.co.in-ல் நவம்பர் 2ம் தேதி டிக்கெட்கள் முன்பதிவு குறித்த செய்திக்கு இதை படிக்கவும்

வாரத்தின் தொடக்கத்திலேயே தீபாவளி பண்டிகை வர இருப்பதால் வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment