‘உதயநிதி’ தமிழ்ப் பெயரா? ஹெச்.ராஜா டவுட்!

உதயநிதி என்பது தமிழ்ப் பெயரா? என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார். அண்மையில் தமிழ்ப் பெயர் சூட்டுவதை வலியுறுத்தி ஸ்டாலின் பேசியதால் இந்தக் கேள்வி!

உதயநிதி என்பது தமிழ்ப் பெயரா? என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியிருக்கிறார். அண்மையில் தமிழ்ப் பெயர் சூட்டுவதை வலியுறுத்தி ஸ்டாலின் பேசியதால் இந்தக் கேள்வி!

உதயநிதி, திமுக.வின் அடுத்தகட்ட தலைவராக நுழைகிற தருணம் இது! அவரது பெயரை மையமாக வைத்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

‘உதயநிதி என்பது தமிழ் பெயரா? சும்மா ஒரு டவுட்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியை சந்தேகம் கலந்து எழுப்பியிருக்கிறார் ஹெச்.ராஜா. அண்மையில் திருமண விழா ஒன்றில் பேசிய ஸ்டாலின், ‘மணமக்களின் பெயர் தமிழில் இல்லை. உங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு தூய தமிழ்ப் பெயராக சூட்டுங்கள் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் என்கிற எனது பெயர் தமிழ்ப் பெயரா? என கேட்கலாம். அது காரணப் பெயர்! ரஷ்ய அதிபராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த தருணத்தில் சென்னை கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலைஞர் பேசிக்கொண்டிருந்தபோது, துண்டுச் சீட்டில் உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்கிற செய்தி அவருக்கு வந்தது. உடனே ஸ்டாலின் பெயரை எனக்கு சூட்டினார். அதற்கு முன்பு, பெரியாரையும் அண்ணாவையும் குறிக்கிற விதமாக ‘அய்யாத்துரை’ என எனக்கு பெயர் சூட்டுவதாகவே திட்டம் இருந்திருக்கிறது’ என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலினின் இந்தப் பேச்சை நினைவுபடுத்தும் விதமாகவே ஹெச்.ராஜா அந்த ‘டவுட்’டைக் கிளப்பியிருக்கிறார். இதற்கான பின்னூட்டத்தில் ஒருவர், ‘உதயம் ன்னா காலை, நிதி ன்னா காசு, காலைகாசு தான் தமிழ். உதயநிதி சமஸ்கிருதம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொருவர், ‘இதுவும் காரணப்பெயர் தான். உதய சூரியன் = உதய, கருணாநிதி = நிதி, உதய + நிதி = உதயநிதி’ என குறிப்பிட்டிருக்கிறார். ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான விவாதம் சூடாக போய்க் கொண்டிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close