தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறதா நியூட்ரினோ?

தமிழகத்தில் தேனி மாவட்டம், பொட்டிபுரம் கிராமம் போடி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் அங்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தேனியில் அமைய இருந்த நியூட்ரினோ ஆய்வக திட்டம் கைவிடப்பட்டு, ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தாபெல்லாம் என்னும் பகுதியில் நிறுவப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து நியூட்ரினோ திட்ட அதிகாரி விவேக் தாடர் பேசிய போது, “தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணி இன்னும் கைவிடப்படவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி குறித்து தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். தேசிய பசுமை தீர்ப்பாய தடை உத்தரவை அடுத்து சுற்றுச்சூழல் அனுமதிக்காக மீண்டும் விண்ணப்பித்துள்ளோம். இருப்பினும், ஆந்திரா உட்பட மாநிலங்கள் நியூட்ரினோ திட்டத்தை தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. அதன் வழக்கின் அடிப்படையிலேயே நியூட்ரினோ திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close