Advertisment

கடலில் விழப்போகும் மனிதர்கள் போன்ற பொம்மைகள்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

விண்வெளி பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். கங்கல்யான் ராக்கெட் அமைப்பதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

author-image
WebDesk
New Update
ISRO President Somnath visited the space museum works at Kanyakumari

கன்னியாகுமரியில் அமையயுள்ள விண்வெளி அருங்காட்சியக பணிகளை வெள்ளிக்கிழமை (டிச.9) மாலை பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் அதிகாரிகளை படத்தில் காணலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கப்பட உள்ள விண்வெளி பூங்கா பணிகளை இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெள்ளிக்கிழமை (டிச.9) மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கன்னியாகுமரியில் விண்வெளி பூங்கா ஸ்பேஸ் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி பார்க் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான இடம் கன்னியாகுமரி கோவளம் கடற்கரை ஒட்டி சூரிய அஸ்தமனம் பகுதியின் அருகே தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் உயர் அதிகாரிகள் இதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் கன்னியாகுமரியில் விண்வெளி கண்காட்சி அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு 12 ஏக்கர் இடத்தை விண்வெளி ஆய்வு மையத்திடம் ஒப்படைத்துள்ளது.

விண்வெளி பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். கங்கல்யான் ராக்கெட் அமைப்பதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

விரைவில் இது விண்வெளியில் ஏவப்படும். விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்காக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்காக சோதனை அடிப்படையில் மனிதர்கள் போன்ற பொம்மைகளை தயார் செய்து விண்வெளிக்கு அனுப்பி பின்னர் அவற்றை கடலில் விழச் செய்து சோதனை செய்யப்படும்.

அதன் பின்னர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நடவடிக்கைகள் துவங்கும் எனவும் அவர் கூறினார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment