Advertisment

திமுக தலைவர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின்: ஜெ.அன்பழகன் இனிய தருணம்

கொரோனா தடுப்புக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan Death

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan Death

J Anbazhagan Death: திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 8.05 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. திமுக-வின் முக்கிய தூண்களின் ஒருவரான ஜெ.அன்பழகனின் மறைவு, கட்சியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

J Anbazhagan Death Live : சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் மரணம் – தனியார் மருத்துவமனை

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan திமுகவில் வெளிப்படையாக பேசும் மூத்த நிர்வாகிகளில் ஒருவர் ஜெ.அன்பழகன். ஃபேஸ்புக், ட்விட்டர் என தனது கருத்துகளை உடனடியாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தவர்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan 2001ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 தேர்தல்களில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan அவர் முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2001 தேர்தலில், தியாகராய நகர் தொகுதியில், அதிமுகவின் சுலோச்சனா சம்பத்தை 2,499 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan திமுக தலைவர் மு.கருணாநிதி, உடல்நிலை சரியில்லாத போது, அவருடன் படம் எடுத்துக் கொண்ட ஜெ.அன்பழகன்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு நேரத்தில், கடந்த மார்ச் மாத இறுதியில், நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்க சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மக்களிடம் வாங்கிய கையெழுத்துகளை ஆளுநரிடம் ஒப்படைத்தபோது...

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan ஒரு மாத சம்பளமான ரூ.1,05,000-ஐ தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார், ஜெ.அன்பழகன்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபோது...

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழாவின் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan திமுக எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதியாக மட்டுமல்லாது தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan 2013ல் ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும், ''யாருடா மகேஷ்'' என்ற படத்திற்கு விநியோகஸ்தராகவும் அன்பழகன் இருந்துள்ளார்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan குழுவினர் விரும்பினால் தனது 'அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தார் அன்பழகன்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan தீவிர விஜய் ரசிகரான ஜெ.அன்பழகன், விஜய்யின் ஒவ்வொரு படத்தின் டீசர், ட்ரைலர், பட வெளியீட்டின் போதும், தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்துவார். அவரது மறைவு மற்ற விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan ஜெ.அன்பழகனுக்கு கிரிக்கெட்டிலும் ஆர்வம் அதிகம். அவர் தலைமையில் நிறைய விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியுள்ளார்.

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan திமுக எம்.பி கனிமொழியுடன்...

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கலைஞர் நினைவிடத்தில்...

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, கையெழுத்து வாங்கியபோது...

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற வேளையில்...

J Anbazhagan Death, DMK MLA J Anbazhagan உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த போது...

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Dmk J Anbazhagan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment