Advertisment

ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு நாள்: அதிமுக, அமமுக கட்சியினர் மெரினாவில் பேரணி- அஞ்சலி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
J Jeyalalitha 2nd Death Anniversary

J Jeyalalitha 2nd Death Anniversary

J Jayalalitha 2nd Death Anniversary : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு அதிமுக மற்றும் அமமுக தனித் தனியாக இன்று மெரினா கடற்கரை வரை அமைதி பேரணி செல்கின்றனர்.

Advertisment

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி uடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவை அடுத்து இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு நேரத்தில் அமைதி ஊர்வலம் நடத்தவுள்ளனர்.

J Jayalalitha 2nd Death Anniversary : மறைந்த ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம்

1.30 AM : ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி, டிடிவி தினகரனின் அமைதி ஊர்வலம் அண்ணா சாலையில் இருந்து புறப்பட்டது.

J Jayalalitha 2nd Death Anniversary

11.30 AM : முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதி மொழி ஏற்றனர்.

11.00 AM : முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் அனைவரும் வந்த பேரணி ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்தது. ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

10.50 AM : ஆணாதிக்கம் நிறைந்துள்ள அரசியல் உலகில், ஒரு பெண்ணாக ஆளுமை நடத்துவது எளிதான காரியமல்ல. மறைந்த ஜெயலலிதா எல்லா தடைகளையும் கடந்து வெற்றியடைந்தார். அவரின் இறுதி நாட்களில் தெளிவற்ற விஷயங்கள் வருத்தம் அளிக்கிறது” என்று கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

December 2018

10.30 AM : ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அதிமுக-வினர் சார்பில் நடக்கும் பேரணி தொடங்கியது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த பேரணி மெரினா ஜெயலலிதா நினைவிடம் நோக்கி பயணிக்கிறது.

10.12 AM : பேரணிக்காக அதிமுக தொண்டர்கள் அனைவரும் வாலாஜா சாலை அருகே குவிய தொடங்கியுள்ளனர்.

J Jeyalalitha 2nd Death Anniversary

10.00 AM : மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 10.15 மணியளவில் பேரணி தொடங்க உள்ளார்.

J Jayalalitha 2nd Death Anniversary

9.30 AM : சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெ. ஜெயலலிதா நினைவிடம் சிவப்பு மற்றும் வெள்ளை மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

J Jeyalalitha 2nd Death Anniversary மெரினாவில் அமைந்திருக்கும் ஜெலலிதா நினைவிடம்

9.00 AM :  “தமிழகத்தில் வரவுள்ள இடைத்தேர்தலை மனதில் வைத்தே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அதிமுக அமைதி பேரணி நடத்துகின்றனர்.அவரது மரணம் தொடர்பான ஒரு நபர் விசாரணையை முழுமையாக நடத்த வேண்டும்,ஜெயலலிதா வழியை இந்த அதிமுக அரசு சரியாக பின்பற்றவில்லை” - ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜெ. தீபா பேட்டி

J Jeyalalitha 2nd Death Anniversary ஜெயலலிதா நினைவிடத்தில் கணவர் மாதவனுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திய ஜெ. தீபா

8.30 AM : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அக்கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அமைதியாக ஊர்வலம் சென்று ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

8.00 AM : முதல்வர் எடபாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர்கள் இன்று காலை 9.30 மணியளவில் வாலாஜா சாலை வழியாக பேரணியாக சென்று இறுதியில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையடுத்து வாலாஜா சாலை முதல் ஜெயலலிதா நினைவிடம் வரை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Aiadmk Jayalalithaa Ammk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment