Advertisment

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 15 காளைகளை அடக்கி கெத்து காட்டிய ரஞ்சித்!

Madurai Alanganallur jallikattu 2019: சிறந்த காளையாக பரம்பப்பட்டி சென்னியம்மன் காளை தேர்வு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு:  15 காளைகளை அடக்கி கெத்து காட்டிய ரஞ்சித்!

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை கோலாகலமாக தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  இந்த  போட்டியில்  சிறந்த காளை மற்றும் வீரருக்கு கார் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

15 காளைகளை பிடித்த ரஞ்சித் குமார் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  சிறந்த காளையாக பரம்பப்பட்டி சென்னியம்மன் காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள், 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதே போல் உற்சாகத்துடன் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில்  20 மாடுபிடி வீரர்கள் உட்பட 36 பேர் காயம் அடைந்துள்ளனர்.

 

Alanganallur Jallikattu 2019 Began in Madurai:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2019!

மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஆகிய கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்  15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக 2 நாட்களுக்கு முன்பு  மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு தொடங்கியது. மாடுபிடி வீரர்கள் 18 முதல் 40 வயது உள்ளவராகவும், சீரான உடற்தகுதி உள்ளவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேர்வில் மொத்தம் 876 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இந்த போட்டியை  வருவாய்த் துறை அமைச்சரார் ஆர். பி உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தில் 50 சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டனர்.

12 மருத்துவக்குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.  தொடர்ந்து 2 மணி நேரம் உற்சாகத்துடன் நடைப்பெற்ற போட்டியில் தற்போது ஒரு சோகமான நிகழ்வு அரங்கேறியது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்தவர் அலங்காநல்லூரைச் சேர்ந்த காங்கேயன் என்ற சசையாண்டி. இவர், கூட்ட நெரிசலில் சிக்கி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை எஸ்பி தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சீறி வரும் காளைகளை வீரர்கள்  அடங்கும் காட்சிகளை பார்வையாளர்கள் கைத்தட்டி ரசித்தனர். இந்த ஜல்லிக்கட்டடு போட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 3 காளைகள் பங்கேற்றனர்.

விஜயபாஸ்கரின் வெள்ளை கொம்பன், சின்ன கொம்பன், செவலை கொம்பன் ஆகிய 3 காளைகள் பங்கேற்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment