பொங்கல் திருவிழா: மல்லிகை பூ கிலோ 7000 வரை உயர வாய்ப்பு

பொங்கல் போன்ற விழா காலங்களின் போது, மல்லிகை பூவின் சப்ளை கம்மியாக இருக்கும் காரணத்தால் விலையேற்றத்தை தவிர்க்க முடியாதது என்று வியாபாரிகள் கூறினர்.

At Rs.5000 per Kilo, jasmine price becomes costly due to pongal Festival demand : பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று மதுரையில் மல்லிகைப் பூவின் விலை  கிலோ ஒன்றுக்கு ரூ.5000 வரையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது கிலோ ஒன்றுக்கு ரூ.3000 என்ற கணக்கில் தான் விரகப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

ஜுன் – நவம்பர் மாதம் வரை மல்லிகை நடவுக்கு ஏற்ற பருவமாகும். ஆனால் இந்தாண்டு கனமழை காரணமாக மல்லிகை பூவின் சாகுபடி மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.  பொதுவாக, ஜனவரி போன்ற  மாதத்தில்  மதுரை சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 10 டன் மல்லிகை பூ சப்ளை செய்யப்படுவது வழக்கம்.  ஆனால்  6 முதல் 7 டன் மல்லிகை தான் சப்ளை செய்வப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நேற்று, கிலோ ரூ.5000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ, பொங்கல், மற்றும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று மேலும் அதிகமான விலையில் விற்கப்படும் (கிலோ ரூ.7000 வரை) என்று தெரியவருகிறது.

மல்லிகை பூவின் தேவை விழா காலங்களின் பொது மக்களிடம் அதிகமாக உள்ளது. ஆனால் மல்லிகை பூவின் சப்ளை கம்மியாக இருக்கும் காரணத்தால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

மல்லிகை பயன்கள்:

  • 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
  • மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
  • அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம். பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடினால் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close