ஜெ. பிறந்தநாள் பொதுக் கூட்டம்: அனுமதி கோரி தினகரன் அணி சார்பில் வழக்கு

பொதுகூட்டத்திற்கு அனுமதி கோரி டிடிவி ஆதரவாளர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 24 ஆம் தேதி வேலூரில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர் பார்த்திபன் தொடர்ந்த மனுவுக்கு வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி டிடிவி தினகரனின் அணி சார்பில் வேலூரில் பொதுகூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கோரி கடந்த 6 ஆம் தேதி வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு இதுவரை காவல் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனவே பொதுகூட்டத்திற்கு அனுமதி கோரி டிடிவி ஆதரவாளர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஏற்கனவே இது போன்ற கூட்டங்கள் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தினை காவல் துறையினர் கடைசி நேரத்தில் நிராகரித்தனர். அதனால் இந்த பொது கூட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவுக்கு வரும் 19 ஆம் தேதிக்குள் வேலூர் வடக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்திற்கே தள்ளிவைத்தார்.

×Close
×Close