Advertisment

ஜெயலலிதாவின் நினைவு இல்லம் : முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்

Jayalalitha Memorial House : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிவின் நினைவு இல்லத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

author-image
WebDesk
New Update
ஜெயலலிதாவின் நினைவு இல்லம் : முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்

தமிழக அரசியலில் அசைக்க முடியாத பெண் சக்தியாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் தமிழக அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள ஜெயல்லிதா சென்னையில் உள்ள போயஸ் காடன் இல்லாத்தில் வசித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று.

Advertisment

publive-image

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்காடன் இல்லத்தை அவரது நினைவு இல்லாமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் சார்பில் முதல்வர் பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில், 6 பேர் கொண்ட குழு அமைத்த முதல்வர், வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் பணியை துரிதப்படுத்தினார்.

68 கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட இந்த இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்பொருளாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதாவின், வாழ்கை வரலாறு, அவர் படித்த புத்தகங்கள், பூஜை அறைகள் அனைத்தும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பணிகளும் முடிவந்த நிலையில் ஜெயலலிதா நினைவு இல்லம் இன்று திறக்கப்பட்டது. முதல்வர் பழனிச்சாமி இந்த இல்லத்தை திறந்து வைத்தார். அவருடன் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக -வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நினைவு இல்லத்தின் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

publive-image

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனான தீபா தீபக் இருவரும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லத்தில், உள்ள பொருட்களை அவர்கள் முன்னிலையில் கணக்கெடுக்க வேண்டும் என்றும், அதுவரை பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினாவில், பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடம் நேற்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment