ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உலக நன்மை வேண்டி அருள்மிகு நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ஜோதி ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; எல்லோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தீயோர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிறைச்சாலை தீயோர்கள் இருக்கும் இடமாக இருக்க வேண்டும்.
கோவை குண்டுவெடிப்பில் 10 நிமிடத்தில் 63 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். சமுதாயத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
காரில் வெடிகுண்டு வெடித்து இருந்தால் கோவையில் 5 கிலோ மீட்டர் சுற்று அளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், என்றார்.
தமிழகத்திற்கு பேரிடி காத்திருக்கிறது என எச்சரிக்கை விடுத்த சிபி ராதாகிருஷ்ணன், வெடிகுண்டு பிரச்சினையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது தேசத்திற்கு பாதுகாப்பற்ற செயல் ஆகும்.
குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் மீண்டும் தமிழகத்தில் குண்டு வைப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“