Advertisment

பத்திரிகையாளர் நல வாரியம்.. அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை மனு

பத்திரிகையாளர் நல வாரியம் தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் பத்திரிகையாளர்கள் மனு அளித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Journalists requested Minister Saminathan to include all journalists in the Journalist Welfare Board

வ..உ..சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு மலரை' முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (நவ.18) தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். அருகில் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளார்.

கோவை, வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனார் சிலை அமைய உள்ள இடத்தினை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் வெள்ளிக்கிழமை (நவ.18) பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,

பத்திரிகையாளர் அனைவரும் நலவாரியத்தில் உறுப்பினராக இணைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்

பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையில் உள்ள விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் அளித்தனர்.

Advertisment

இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாமிநாதன் மூன்று வருடம் பத்திரிக்கை துறையில் அனுபவம் இருந்தால் போதும் என்றும் தற்போதைய மனு சம்பந்தமாக பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் இது குறித்து விளக்கங்களை கேட்டுக்கொண்டதும் மனுவை பரிசீலனை செய்த பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாவட்டம் வாரியாக அடையாள அட்டை கொடுப்பது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நீதிமன்றத்தின் பரிந்துரையை பொறுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அடையாள அட்டை கொடுக்க ஆவன செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

கோவை செய்தியாளர் பி.ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment