Advertisment

சி.பி.எம் மாநிலச் செயலாளராக மீண்டும் கே பாலகிருஷ்ணன் தேர்வு; கோயில்களில் பாஜக வியூகத்தை முறியடிப்போம் என சூளுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23வது மாநில மாநாடு நிறைவு நாளில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கோயில்களில் பாஜகவின் வியூகத்தை முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சி.பி.எம் மாநிலச் செயலாளராக மீண்டும் கே பாலகிருஷ்ணன் தேர்வு; கோயில்களில் பாஜக வியூகத்தை முறியடிப்போம் என சூளுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) 23வது மாநில மாநாடு நிறைவு நாளில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், கோயில்களில் பாஜகவின் வியூகத்தை முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31 ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நிறைவு நாளான இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி உள்ளிட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டின் நிறைவு நாளான இன்று 80 பேர் கொண்ட மாநிலக்குழுவிற்கு 79 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒரு இடத்திற்கு மட்டும் பின்னர் தேர்வு செய்யலாம் என மாநாடு முடிவு செய்துள்ளது. மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே. பாலகிருஷ்ணன் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 15 பேர் கொண்ட செயற்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

மேலும், இந்த மாநாட்டில், 2022 ஏப்ரல் 6-10 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் 23வது அகில இந்திய மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து 50 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சி.பி.எம் கட்சியியில் 5 பேர் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக்குழுவிற்கு ப. சுந்தரராசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமால் இந்த மாநாட்டில், சி.பி.எம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

  1. கே. பாலகிருஷ்ணன் 2. உ. வாசுகி 3. பி. சம்பத்
  2. ப. செல்வசிங் 5. எம்.என்.எஸ். வெங்கட்ராமன் 6. எஸ். நூர்முகமது 7. பி. சண்முகம் 8. என். குணசேகரன்
  3. கே. கனகராஜ் 10. மதுக்கூர் ராமலிங்கம் 11. சு. வெங்கடேசன் 12. கே. பாலபாரதி 13. ஜி. சுகுமாறன்
  4. கே. சாமுவேல்ராஜ் 15. எஸ். கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாநிலக்குழு உறுப்பினர்களாக, கே. பாலகிருஷ்ணன்,

உ.வாசுகி , பி.சம்பத், ப.செல்வசிங், எம்.என்.எஸ். வெங்கட்ராமன், எஸ். நூர்முகமது, சண்முகம், என். குணசேகரன், கே. கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், கே. பாலபாரதி, சு. வெங்கடேசன், எஸ். முத்துக்கண்ணன் நாகை மாலி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எழுத்தாளர் சு. வெங்கடேசன் மாநிலக்குழு உறுப்பினராக புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில், 72 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன். மாநில செயற்குழு பொறுப்பில் இருந்து அ.சௌந்தரராஜன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாட்டிம், கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே. பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு செயலாளராக நீண்ட நாளகளாக செயல்பட்டவர். 2006 முதல் 2011 வரை சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர் கே.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “பாஜகவை எதிர்க்கும் கூட்டு போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம். அதே மாதிரி திமுக இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறபொழுது, அவர்கள் அறிவித்திருக்கிற பல அறிவிப்புகளை வரவேற்கிற அதே நேரத்தில், மேலும், பல திட்டங்களை, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை நாங்கள் வற்புறுத்துகிறோம். ஒரு நட்பு கட்சி என்கிற முறையில் அவர்களிடம் இதை நிறைவேற்று வேண்டும் என்று கேட்கிற முறையில் நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம். அதே சமயத்தில் மக்களின் வாழ்வாதார பிரச்னைகள் என்று வருகிறபோது, இன்றைக்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகிக்கொண்டிருக்கிறது, விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது, பல இடங்களில், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில்தான் ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். சிறு குறு தொழில்கள் முழுவதும் மிகவும் நாசமாகப் போய்க்கிடக்கிறது. எனவே இப்படிப்பட்ட வாழ்வாதாரங்களுக்காக நடத்துகிற போராட்டங்களில் பிரச்னைகளில் ஒரு தீவிரமான வர்க்கப் போராட்டமாக முன்னெடுப்பதாக இந்த மாநாட்டில் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். இனி வரக்கூடிய காலங்களில் இந்த உழைப்பாளி மக்களுடைய வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பொம்.

100 நாள் வேலையை சிதைக்கிறார்கள், கிராமப்புற பொருளாதாரம் அழிந்துகொண்டிருக்கிறது. எனவே, பாதிக்கப்படுகிற இந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையை மையப்படுத்தி, நாங்கள் தனியாகவும் போராடுவோம். எங்களோடு ஒத்தக் கருத்துக்கொண்டு வருகிற அந்த அமைப்புகளோடு சேர்ந்தும் போராடுவோம். தமிழ்நாட்டில் படிப்படியாக ஒரு இடது சாரி ஜனநாயக மாற்றை உருவாக்குகிற பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வது என்று நாங்கள் தீர்மாணித்து இருக்கிறோம் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக அரசு ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனி சட்டத்தை இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

இன்றைக்கும் தமிழ்நாட்டில், தீண்டாமைக் கொடுமை என்பது நடைபெறுகிறது. எங்களுக்கு எல்லாம் ரொம்ப வருத்தம் என்னவென்றால், தமிழக அமைச்சரவையில் இருக்கிற ஒரு அமைச்சர், ஒரு பி.டி.ஓ அதிகாரியைப் பார்த்து எஸ்சி பி.டி.ஓ என்று அவரை இழிவு படுத்தும் வகையில் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. நல்லவேலை முதலமைச்சர் உடனடியாக அதில் தலையிட்டு துறையை மாற்றுகிற நடவடிக்கை எடுத்திருப்பது நல்லது. வரவேற்கத்தக்கது. ஆனால், இது அவரை துறை மாற்றுவதனால் மட்டும் தீர்கிற பிரச்னை அல்ல.

நான் முதலமைச்சருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வருகிற குற்றமாகக் கருத வேண்டும் என்று கூறினார்.

இனிமேல் கோயில்களில் விழாக்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கெடுக்கும் என்ற அக்கட்சியின் அறிவிப்பு குறித்து கூறிய கே.பாலகிருஷ்ணன், கோயில்களில் பாஜகவின் வியூகத்தை முறியடிப்போம் என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu K Balakrishnan Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment