Advertisment

திருநங்கைகள் என்றாலே கடுமையான ஜெயில் தண்டனை தரப்படுகிறது - கல்கி சுப்பிரமணியம்

ஆப்பிரிக்கா, உகாண்டா, நைஜீரியா, இந்தியா ஆகிய நாடுகளில் திருநங்கை என்றாலே கடுமையான ஜெயில் தண்டனை கொடுக்கப்படுகிறது என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
திருநங்கைகள் என்றாலே கடுமையான ஜெயில் தண்டனை தரப்படுகிறது - கல்கி சுப்பிரமணியம்

ஆப்பிரிக்கா, உகாண்டா, இந்தியா, நைஜீரியா நாடுகளில் திருநங்கை என்றாலே கடுமையான ஜெயில் தண்டனை கொடுக்கப்படுகிறது என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வியாழக்கிழமை கூறினார்.

Advertisment

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்கி சுப்பிரமணியம் கூறியதாவது:

திருநங்கைகள் நேபால் அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளில் திருநங்கைகள் அதிகமாக உள்ளனர். ஆப்பிரிக்கா, உகாண்டா, இந்தியா, நைஜீரியா நாடுகளில் திருநங்கை என்றாலே கடுமையான ஜெயில் தண்டனை கொடுக்கப்படுகிறது.

publive-image

நான் திருநங்கைகளுக்காக நான் வகுப்புகள் எடுத்து வருகிறேன். திருநங்கைகளுக்கு துன்புறுத்தல் அதிகம் உள்ள நாடு ஆப்பிரிக்கா, கத்தார், சவுதி அரேபியா. திருநங்கைகள் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த திருநங்கையை விட தற்பொழுது மாறி இருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். காவல்துறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்று உள்ளார்கள். பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். திருநங்கை என்றவுடன் புறக்கணிக்கும் பெற்றோர்களின் செயல் சட்டத்திற்கு புறம்பானது. அவர்களின் செயலுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். பல்வேறு திருநங்கைகளுக்கு நான் உதவி செய்து வருகிறேன்.

publive-image

டாக்டர் செல்வி அன்பில் மகேஷ் அம்மாவிற்கு சிகிச்சை கொடுத்து வருகிறார். இந்தியாவின் பல்கலைகழகத்தில் பேசும்போது தொன்மையான வரலாறுகளை அதிகம் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தியாவிலிருந்து திருநங்கை கல்கி சுப்பிரமணியம் பல புகழ் பெற்ற நிறுவனங்களால் உரை நிகழ்த்தப்படுவது இதுவே முதல் முறை. இவர் அமெரிக்காவில் உள்ள ஐந்து உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேசி விட்டு வந்துள்ளார்.

publive-image

அக்டோபர் 11-ம் தேதி யேல் பல்கலைக்கழகத்திலும் அக்டோபர் 13-ம் தேதி கார்னல் பல்கலைக்கழகத்திலும் அக்டோபர் 24-ம் தேதி ரட் ஜேர்ஸ் பல்கலைக்கழகத்திலும் 25-ம் தேதி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் 28-ம் தேதி ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்திலும் பேசி உள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்கள் கல்கி எழுதிய வி ஆர் நாட் தி அதர்ஸ் என்ற புத்தகத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினர். அரவான் மற்றும் மோகினி ஓவிய படைப்பை ஹார்ட்வேர் பல்கலைக்கழக இந்திய மாணவர் அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் கல்கி சுப்பிரமணியம்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் சமூகப்பணி கலை மற்றும் எழுத்துக்களில் மிகுந்த ஆர்வமுடன் மாணவர்கள் திரண்டனர். எல்லா பல்கலைக்கழகத்திலும் தன் கவிதைகளை வாசித்துள்ளார். கல்கி சுப்பிரமணியம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பழங்காலத்திலிருந்து சமகாலம் வரையிலான திருநங்கைகள் சமூகத்தின் வரலாற்றைப் பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடக்கும் திருநங்கைகள் உரிமைகள் இயக்கம் பற்றியும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment