தாயை கொன்ற காம கொடுரன் மும்பையில் இருந்து தப்பியோட்டம்

ஹாசினி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தஷ்வந்த், தாயார் சரளாவை கொலை செய்து மும்பையில் பதுங்கியிருந்தார். அவர் மும்பையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பினான்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து விடுதலையான தஷ்வந்த், தனது தாயார் சரளாவை கொலை செய்து மும்பை தப்பியோடினார். இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை சென்னை போலீசார் கைது செய்தனர். மும்பையில் அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து மேலும் விபரம் வருமாறு:

சென்னை அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி. இவரை கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதானவர் தஷ்வந்த். 24 வயதான அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்தான்.

ஜாமீனில் இருந்து வெளியே வந்த தஷ்வந்த், குன்றத்தூரில் பெற்றோருடன் தங்கியிருந்தார். கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த தாயார் சரளாவை அவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, தப்பியோடிவிட்டான். வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டான். தஷ்வந்தை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விசாரித்த போது, சிறையில் இருந்த போது சில ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. ஜெயிலில் இருந்து விடுதலையான தஷ்வந்த் பெற்றோர்களிடம் பணம் கேட்டு, பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

தனது உல்லாச வாழ்க்கைக்கு தேவையான பணம் தராததால் தாயாரை கொலை செய்துவிட்டு, நகை பணத்துடன் தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறையில் அவனுடன் நண்பர்களான ரவுடிகளிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மும்பையைச் சேர்ந்த அழகி ஒருவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டதாகவும் அவரை த் தேடி சென்று இருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து பஸ் மூலம் பெங்களூர் சென்று அங்கிருந்து மும்பைக்கு தப்பியோடியது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவர் மும்பையில் பாலியல் தொழில் நடக்கும் பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அந்த பகுதியை கண்காணித்த சென்னை போலீசார், மும்பை போலீஸ் உதவியுடன் தஷ்வந்தை இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இன்று மும்பை கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்திய போலீசார் அவனை சென்னை கொண்டு வர முயற்சி எடுத்தனர். அவனை விமானம் மூலம் சென்னை கொண்டு வர முடிவெடுத்தனர். மாலை ஏழு மணியளவில் விமான நிலையம் சென்றனர். அங்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என்று சொன்ன தஷ்வந்தை போலீசார் அனுமதித்தனர்.

உள்ளே சென்ற தஷ்வந்த், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து போலீசார் உள்ளே சென்று தேடிய போது, அவன் உள்ளே இல்லை என்பது தெரிய வந்தது. அதன் பின்னரே தஷ்வந்த் தப்பி ஓடிய விபரம் போலீசாருக்கு தெரிய வந்தது.

உடனடியாக சென்னையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சென்னை போலீசார் மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மும்பையில் இருந்து தப்பி சென்று இருக்க முடியாது என்பதால், தஷ்வந்தை மும்பை போலீசாரும் தேடி வந்தனர்.

இதனிடையே, போலீசார் தஷ்வந்தை என்கவுண்டர் செய்வதற்காக இப்படியொரு நாடகத்தை ஆடுவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

×Close
×Close