Advertisment

காங்கிரசுக்கு கமல்ஹாசன் கட்சி அழைப்பு

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய தொகுதிகள் ஒதுக்காமல் அதன் இருத்தலையே இல்லாமல் செய்யும் திமுகதான் பாஜகவின் பி டீம்

author-image
WebDesk
New Update
mk stalin, dmk alliance possiblilities, makkal needhi maiam, kamal haasan, முக ஸ்டாலின், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், திமுக, திமுக கூட்டணி, congress, ks alagiri

கமல்ஹாசன் தலைமயிலான மக்கள் நீதி மய்ய  கூட்டணியுடன் இனைந்து காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் நல்லது என அக்கட்சி தெரிவித்தது.

Advertisment

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் இரண்டு பிராதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்க உள்ளன.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு இழுப்பறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி  நாற்பத்திற்கும் மேற்பட்ட இடங்களை வலியுறித்தி வருகிறது. ஆனால், கூட்டணியில் 20 தொகுதிகளை மட்டும் ஒதுக்க திமுக முடிவெடுத்துள்ளது. மேலும், மேலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை இன்றுடன் முடிக்க திமுக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விருப்பமனு தாக்கல் செய்தவர்களுடன் நேர்கானல் முடிந்த பிறகே திமுகவுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

மேலும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத்  தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட கமல்ஹாசன் , கழகங்கள் உருவானதும் காலத்தின் கட்டாயம். ஊழலில் ஊறி போய்விட்ட கழகங்கள் வெளியேற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தமிழர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற தயாராகி விட்டன என்று கூறினார்.

மேலும், "பாஜகவின் பி- டீம் கமல்ஹாசன் என்ற பொய்ப் பிரசாரத்தை பரப்பியது திமுகவினர் தான். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பாஜகவின் திட்டம். ஒவ்வொரு  மாநிலங்களில் இருந்தும் காங்கிரஸை விரட்ட வேண்டும் என்ற முன்னைபோடு அவர்கள் போராடி வருகின்றனர். அதற்கேற்ப, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய தொகுதிகள் ஒதுக்காமல் அதன் இருத்தலையே இல்லாமல் செய்யும் திமுகதான் ‘பி டீம்’" என்று தெரிவித்தார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் குமரவேல் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி எங்கள் தலைமயிலான  மூன்றாவது கூட்டணிக்கு வந்தால் போதுமான  தொகுதிகள் ஒதுக்கப்படும்" என்று அழைப்பு விடுத்தார்.

1971,1989, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்கலைத் தவிர்த்து காங்கிரஸ் தமிழகத்தில்  குறைந்தது 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியது. மேலும், 1984, 1991 வருட சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக முறையே 62, 60 சட்டமன்றத் தொகுதிகளை கைபற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kamal Haasan Tamilnadu Election 2021 Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment