‘சீரமைப்போம் தமிழகத்தை’ : முதற்கட்ட தேர்தல் பிரச்சார தேதிகளை அறிவித்தார் கமல்ஹாசன்

வரும் 13தேதி முதல் 16தேதி வரை முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார்.

By: Updated: December 10, 2020, 10:15:45 PM

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற் கட்ட பிரச்சாரம் குறித்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் வெளியிட்டது. வரும் 13தேதி முதல் 16தேதி வரை முதல் கட்ட பிரச்சாரத்தை மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார்.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

” சீரமைப்போம் தமிழகத்தை என்கின்ற மிக உன்னதமான நோக்கத்துடன் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை வருகின்ற டிசம்பர் 13, 14, 15, 18 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி , திண்டுக்கல் , விருதுநகர் , திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமாரி  ஆகிய மாவட்டங்களில் நிகழ்த்தவிருக்கிறார்.

இந்நிகழ்வில் நமது கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கட்சி உறுப்பினர்களும் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டு தலைவர் அவர்களின் சுற்றுப்பயணத்தை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.”

என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

 

இதற்கிடையே, மக்கள் நீதி மய்ய பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான செயல் வீரர்கள் கூட்டம், பொள்ளாச்சியில் வெற்றிகரமாக நடைபெற்றது. காணொளிக் காட்சி மூலமாக கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kamal haasan makkal needhi maiam election campaign announcement

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X