Advertisment

கமல்ஹாசன் பிறந்தநாள் விழா 3 நாட்கள் கொண்டாட்டம்: கட்சியினருக்கு முக்கிய கட்டளை

Kamal Haasan’s 65th birthday : தொண்டர்கள் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர்கள் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kamal Haasan’s 65th birthday - three day celbration plan

Kamal Haasan’s 65th birthday - three day celbration plan

வரவிருக்கும், நவம்பர் 7ம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா. திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், இதை கொண்டாடும் விதமாக மூன்று நாட்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

கமல் பிறந்த நாளும், அவரது தந்தை இறந்த நாளும் ஒன்றாக வருவதினால், நவம்வர் 7ம் தேதியன்று தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை ஸ்ரீனிவாசனின் உருவச்சிலையும் கமல் திறந்து வைக்கிறார்.

அடுத்த நாள்(நவம்பர் 8), ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனது அலுவகத்தில் இயக்குனர் பாலசந்தர் உருவச்சிலையை கமல் திறந்து வைக்கிறார். அன்று மாலையில் சென்னையில் உள்ள ஒரு பிரபல சினிமா தியேட்டரில் அவர் நடித்த ஹே ராம் திரையிடப்படுகிறது. கமல் அதில், கலந்து ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்வையிடுவது மட்டுமல்லாமல், படத்தைப் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லி கலந்துரையாடுவார் என்று நம்பப்டுகிறது.

நவம்பர் 9ம் தேதி 9ம் தேதி மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரி திட்டமிட்டிருந்தனர். கமல், இளையராஜாவை இணைக்கும் சினிமா பாடல்கள் பிரத்தியோகமாக இதற்காக தயார் செய்யப்பட்டு வந்திருந்தது.

ஆனால், இந்த இசை நிகழ்ச்சி தற்போது நவம்பர் 17ம் தேதி அன்று நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்க இருக்கிறதாம் . சென்னை வானிலை, ரசிகர்கள் கூட்டம் போன்ற காரணங்களுக்காக இந்த ஒத்திவைப்பு நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கு, இளையராஜாவும் இதை மிகவும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல ரசிகர்களிடம் எதிர்பார்ப்பது:

 

தனது பிறந்த நாள் அன்று, பரமக்குடியில் தனது உருவச்சிலை திறக்கும் விழாவிற்கு, நண்பர்கள் ,ரசிகர்கள், தொண்டர்கள் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர்கள் மற்றும் கொடிகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்குமாறு கமல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment