Advertisment

மோடிக்கு கமல் வேண்டுகோள்: 'உங்களுக்கு பேனர் வைக்க நடக்கும் முயற்சிக்கு முடிவு கட்டுங்கள்'

Kamal Haasan demands PM to end banner culture: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை பிரதமர் மோடி ஒரு முன்னோடியாகச் செய்தால் தமிழர்களின் உணர்வுகள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Makkal Needhi Maiam, Kamal Haasan, kamal haasan demands PM to end banner culture, கமல்ஹாசன், மோடி, மக்கள் நீதி மய்யம் கட்சி, Kamal Haasan tweets to PMOIndia, Kamal Haasan tweets to PM Modi, subashree dead after banner falling, subashree, PM Modi

Tamil Nadu news today in tamil

Kamal Haasan demands PM to end banner culture: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை பிரதமர் மோடி ஒரு முன்னோடியாகச் செய்தால் தமிழர்களின் உணர்வுகள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ  என்ற  இளம் பெண் சாலையின் நடுவில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக பொதுமக்களின் கோபம் திரும்பியது. இதனால், அரசியல் கட்சிகள், தங்களுடைய அரசியல் பொதுக்கூட்டங்கள், கட்சிக்காரர்களின் விழாக்களில் பேனர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது. திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பேசினார்கள். இதனிடையே, சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருவதையொட்டி தமிழக அரசு அவரை வரவேற்கும் விதமாக பேனர்வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது தமிழக அரசியலில் சர்ச்சையை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை பிரதமர் மோடி ஒரு முன்னோடியாகச் செய்தால் தமிழர்களின் உணர்வுகள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும் என்று  பிரதமருக்கு டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மரியாதைக்குரிய பிரதமர், @PMOIndia

சுபஸ்ரீயின் மரணத்தை சமாளிக்க தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் போராடி வரும் நிலையில், உங்கள் பதாகைகளை அமைப்பதற்கான அனுமதியைப் பெற தமிழ்நாடு அரசு நீதிமன்றங்களை அணுகியுள்ளது.

இந்த இடையூறு பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை நீங்கள் ஒரு முன்னோடியாகச் செய்தால், அது தமிழர்களின் உணர்வுகள் மீதான உங்கள் அக்கறையை பிரதிபலிக்கும். மேலும், அதுவே உங்களுக்கு மிகப் பெரிய விளம்பரத்தைப் பெற்றுதரும். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu Kamal Haasan Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment