கமல்ஹாசன் இன்று விஜயகாந்துடன் சந்திப்பு : ‘முன்னோடி’யுடன் ஆலோசனை

கமல்ஹாசன் தனது அரசியல் பயணம் குறித்து இன்று விஜயகாந்துடன் ஆலோசனை நடத்துகிறார். அரசியல் குறித்து தனது ‘முன்னோடி’யின் கருத்துகளை பெற இருக்கிறார்.

கமல்ஹாசன் தனது அரசியல் பயணம் குறித்து இன்று விஜயகாந்துடன் ஆலோசனை நடத்துகிறார் . அரசியல் குறித்து தனது ‘முன்னோடி’யின் கருத்துகளை பெற இருக்கிறார்.

கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி ராமநாதபுரத்தில் தனது முதல் அரசியல் சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கிறார். இதையொட்டி பல்வேறு தலைவர்களை நேரில் சென்று சந்தித்து பேசி வருகிறார். முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோரிடம் ஆலோசனை பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை நேற்று (18-ம் தேதி) சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (பிப்ரவரி 19) தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்திக்கிறார். பகல் 12.15 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது.

விஜயகாந்த் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், ‘கமலும் ரஜினியும் சினிமாவில் எனக்கு சீனியர். ஆனால் அரசியலில் அவர்களைவிட நான் சீனியர்’ என்றார். இந்த விமர்சனத்தை கமல்ஹாசன் மிக பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார். அண்மையில் ஒரு பேட்டியில் இது குறித்து கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘அவர் சொன்னது முற்றிலும் உண்மை. எங்களுக்கு முன்பாகவே அவர் அரசியலுக்கு வந்தார். அவர் எங்களின் முன்னோடி’ என பெருமையாக குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில் விஜயகாந்தையும் சந்திக்க கமல்ஹாசன் தரப்பில் அப்பாய்ன்மென்ட் கேட்கப்பட்டது. அதற்கு உடனே விஜயகாந்த் ஒப்புதல் கொடுத்தார். அதன் அடிப்படையில் இந்த சந்திப்பு நடக்கிறது. நட்பு மற்றும் அரசியல் ரீதியிலான ஒரு ஃபார்மாலிட்டி சந்திப்பாக இது இருக்கும் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close