Advertisment

இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை - கமல்ஹாசன் அறிவிப்பு

Kamalhaasan : இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் தனக்கு பங்கெடுக்க விருப்பமில்லாததால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamalhaasan, makkal needhi maiam, tamil nadu byelection, nanguneri, vikkiravandi, dmk, admk, congress

kamalhaasan, makkal needhi maiam, tamil nadu byelection, nanguneri, vikkiravandi, dmk, admk, congress, கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம், இடைத்தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி, திமுக, அதிமுக, காங்கிரஸ்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisment

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அக்டோபர் மாதம் 21ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று ( 21ம் தேதி) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆளுங்கட்சியான அதிமுக, 2 தொகுதிகளிலும் நிற்பது உறுதியாகியுள்ளது. திமுக விக்கிரவாண்டி தொகுதியிலும் போட்டியிடும், அதன் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களைகளையும், அவர்களது தலைப்பாகைகளையும் தக்கவைத்துக்கொள்வதற்காக ஆட்சியில் இருந்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் தனக்கு பங்கெடுக்க விருப்பமில்லாததால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை

பழைய கொள்ளையர் கட்சிகளையும், அதன் கூட்டுப் பங்காளிகளையும், ஆட்சியில் இருந்து அகற்றி 2021-ல் ஆட்சியை கைப்பற்றும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். பெருவாரி மக்களின் எண்ணப்படி மக்களாட்சிக்கு மக்கள் நீதி மய்யம் வழி வகுத்து வருவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலை, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி புறக்கணித்துள்ளநிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment