'மக்களுடனான பயணம்' தொடங்கும் கமல்ஹாசன்!

'மக்களுடனான பயணம்' என்ற பெயரில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்

மக்களுடனான பயணம் என்ற பெயரில் மே 16-ம் தேதி முதல் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் எனும் பெயரில் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், சமீபத்தில் மாதிரி கிராம சபை நடத்தி உள்ளாட்சி அமைப்பு பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘மக்களுடனான பயணம்’ என்ற பெயரில் அடுத்த மாதம் 16-ம் தேதி கன்னியாகுமரியில் கமல்ஹாசன் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 17-ம் தேதி தூத்துக்குடி, 18-ம் தேதி திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்கிறார். இரண்டாம் கட்டமாக ஜுன் மாதம் 8-ம் தேதி திருப்பூர், 9-ம் தேதி நீலகிரி மற்றும் 10-ம் தேதி கோயம்பத்தூர் ஆகிய ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

×Close
×Close