HBD Kamarajar: காமராஜர் பிறந்த தினத்தையொட்டி சமூக வலைதளங்கள் இன்று முழுக்க பெருந்தலைவர் புகழ் பாடின. பலரும் வாழ்த்துகளை குவித்தார்கள்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினம் இன்று (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காமராஜர் பிறந்த தினத்தையொட்டி இன்று அவரது சிலைகளுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

காமராஜர் புகழ் பாடும் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலிபரப்பாகின. சமூக வலைதளங்களிலும் காமராஜர் பற்றிய செய்திகளே முழுமையாக ஆக்கிரமித்தன. ட்விட்டரில், #HBDKamarajar என்கிற ‘ஹேஷ்டேக்’ ட்ரென்ட் ஆனது.
காமராஜர் குறித்து சிலர் வெளியிட்ட பதிவுகளை காணலாம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. ‘பெருந்தலைவர் காமராஜரின் நீடித்த புகழுக்கு பெரிதும் காரணம் அரசியல் திறனா? ஆட்சி திறனா?’ என்கிற தலைப்பில் சுகி.சிவம் அவர்களை நடுவராக கொண்ட பட்டிமன்றத்தை திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார்.
காமராஜரின் எளிய வாழ்வும் விசாலமான பார்வையும்! பெருமாள் மணி உரை
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் தமிழகத்தில் செயல்படுத்திட, அவரது பாதையில் உன்னத ,நேர்மையான ஆட்சியை வழங்கி வரும் பிரதமர் நரேந்திர மோடி கரத்தை வலுப்படுத்துவோம்.’ என கூறியிருக்கிறார்.
உதவியாளர்: 2 லட்சம் ரூபாய் இருந்தால் நீங்கள் செய்த சாதனைகளை படமாக்கி வரும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்
பெருந்தலைவர் காமராஜர்:அடேங்கப்பா, அதுல நான் நாலு பள்ளி கூடம் கட்டிருவேனே. pic.twitter.com/A2drpr4JkY
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) 15 July 2018
காமராஜர் போன்ற தலைசிறந்த அரசியல்வாதி உருவாக வேண்டும் என்பது என்னுடைய ஆசை என ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார்.