காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம்! நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது

காஞ்சிபுரம் 66வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

By: Updated: February 28, 2018, 10:43:46 AM

காஞ்சிபுரம் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆன்மீகத்தையும் தாண்டி சமூகத்தில் பல தரப்பு மக்களிடம் நல்லெண்ணம் கொண்டவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் 69வது மடாதிபதியாக இருந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 82 வயதான இவரது இயர் பெயர் சுப்பிரமணிய மகாதேவ ஐயர். 1935ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவருடைய 19வது வயதில் அதாவது, 1952ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமீபகாலமாக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல் நலம் தேறி மடத்துக்குத் திரும்பச் சென்றார். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் சென்ற தமிழக கவர்னர் நேற்று காஞ்சிபுரம் சென்றார். அவர் காஞ்சி மடத்துக்குச் சென்று ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்று காலை 8.30 மணியளவில் அவர் உடலில் இருந்து உயிர் பிரிந்தது. இதனை காஞ்சி மடத்தின் மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

காஞ்சி சங்கராமடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரந்த தகவல் கிடைத்ததும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்:

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் :

டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் (தமிழக பாஜக தலைவர்):

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, காமாட்சி அம்மன் கோயில் நடைசாத்தப்பட்டுள்ளது.

மறைந்த ஜெயேந்திரரின் உடல் மக்களின் இறுதி அஞ்சலிக்காக காஞ்சிபுரத்தில் மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மடத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மட்டுமே உடலை பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். உட்கார்ந்த நிலையில் அவர் வைக்கப்பட்டுள்ளார். மடத்தின் சடங்குகள் முடிவடைந்த பின்னரே மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தெரிகிறது.

ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்து வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து, அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், பல்வேறு மாடாதிபதிகள் வர வாய்ப்பு இருப்பதால், நாளைதான் இறுதி சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kanchi madapathy jayendra saraswathi swamiji dies

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X