கனிமொழி பிறந்தநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பியின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பியின் பிறந்த நாளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக நாடாளுமன்ற குழு தலைவரான கனிமொழி எம்பி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். காலையில் எழுந்த அவர் தனது தந்தையான கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து ஆசிப் பெற்றார். பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துப் பெற்றார்.

அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயூடு ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தனர். ராஜ்யசபா துணை தலைவர் பிஜே.குரியன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தெலுங்கு தேச கட்சியின் எம்பிக்கள், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜய் தாரா எம்பி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் தங்கபாலு, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராம்தாஸ் எம்பி., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் , டி.ராஜா எம்.பி., திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, மகேஷ் பொய்யாமொழி, பெப்சி முரளி, ஆரோக்கிய எட்வின் உள்பட மற்றும் திமுக முன்னணியினர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்கள்.

×Close
×Close