Advertisment

திராவிடம் நம் பாதை… திராவிடம் நம் வாழ்க்கை முறை..! கனிமொழி வீடியோ விளக்கம்

Dravidam is a lifestyle; Kanimozhi Karunanidhi dmk Tamil News: "திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு உணர்வு, இயக்கம் என்பதையெல்லாம் தாண்டி, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது" - திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.

author-image
WebDesk
New Update
Kanimozhi Karunanidhi Tamil News: Dravidam is a lifestyle; Kanimozhi Karunanidhi dmk

Kanimozhi Karunanidhi Tamil News: வருடந்தோறும் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாளையும் இணைத்து செப்டம்பர் 15,16 மற்றும் 17 திராவிட முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இவ்வருடம் திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு முப்பெரும் விழாவினைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

Advertisment

அந்த காணொளியில் "பத்து வருடப் போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி, நல்லாட்சியாக மலர்ந்திருக்கிறது. இது மக்கள் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்த ஆட்சி. பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றி, அறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சி கொள்கையினை நிலைநிறுத்தும் விதமாக CAA சட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டத்தை எதிர்த்தும் தீர்மானம் கொண்டு வந்து, ஒரு மாநிலத்தை, மாநிலத்தில் ஆட்சி செய்யும் கட்சி தான் ஆள வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தக் கூடிய ஆட்சியாக திமுக ஆட்சி அமைத்திருக்கிறது.

தலைவர் கலைஞரைப் போல எல்லோரையும் ஒன்றாக இணைத்து, எல்லோருக்கும் வாய்ப்புகளும், எல்லா மக்களுக்கும் உரிமைகளைத் தரக்கூடிய ஆட்சியாகவும் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார். இத்தனை ஆண்டுகள் திராவிடம் நமக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்ற உணர்வையும், எல்லோருக்கும் உரிமை இருக்க வேண்டும், எல்லோர்க்கும் சுயமரியாதை இருக்க வேண்டும் என்ற உணர்வையும் விதைத்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கும், இந்த திராவிடத்தை எப்படி எடுத்துச் செல்வது என்பது முக்கியம்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு உணர்வு, இயக்கம் என்பதையெல்லாம் தாண்டி, அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இவர்களெல்லாம், இந்த மண்ணில் விதைத்திருக்கக் கூடிய விருட்சம், என்றும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய கொள்கைகளை, அவர்களுடைய கனவுகளை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்குப் பெண்கள், இளைஞர்கள், இந்த சமூகத்திலே யார் யார்க்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகிறதோ அவர்கள் எல்லாம், ஒன்றிணைந்து தமிழ்நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அந்த பாதை 'திராவிடம்' "என்று பேசியிருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Dmk Tamilnadu News Update Tamilnadu Latest News Kanimozhi Mp Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment