Advertisment

சி.ஏ.ஏ தடியடி - இணை ஆணையர் கபில் குமார் மீது விசாரணை கோரும் எம்.பி. கனிமொழி

சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐ.பி.எஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanimozhi mp demand investigation kapil kumar ips caa protest vannarapettai

kanimozhi mp demand investigation kapil kumar ips caa protest vannarapettai

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது போலிஸார் தடியடி நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

போராட்டக்காரர்கள் மீது போலிஸார் நடத்திய அராஜக தாக்குதலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் யாரும் இறக்கவில்லை - சென்னை போலீஸ்

இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.க்கு எதிராக போராடியவர்கள் மீது போலிஸ் தடியடி நடத்தியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சி.ஏ.ஏ / என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐ.பி.எஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது.

தூத்துக்குடியில், ஸ்டர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் கபில்குமார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக கபில்குமார் மீது சி.பி.ஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அ.தி.மு.க அரசு.

வண்ணாரப்பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, கபில் குமார் சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் அலைகடலென திரண்ட பெண்கள் - படங்கள் உள்ளே

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment