Advertisment

நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்திருந்த பக்கத்து வீட்டு பெண் கைது

கன்னியாகுமரியில் ஒன்றரைப் பவுன் நகைக்காக சிறுவனைக் கொன்று பீரோவில் ஒளித்து வைத்திருந்த பக்கத்து வீட்டுப் பெண் காவல்துறையினரால் கைது

author-image
WebDesk
New Update
நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்திருந்த பக்கத்து வீட்டு பெண் கைது

Kanniyakumari missing 4 year old boy found dead in neighbours almirah: கன்னியாகுமரியில் ஒன்றரைப் பவுன் நகைக்காக சிறுவனைக் கொன்று பீரோவில் ஒளித்து வைத்திருந்த பக்கத்து வீட்டுப் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் கடலோர கிராமமான கடியப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் (35), சில்ஜா (31) ஆகியோரின் மூத்த மகன் ஜோகன். ரிச்சர்ட் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மனைவி, மகன் ஜோகன்  மற்றும் மகள் கடியப்பட்டினத்தில் தனியே வசித்து வருகின்றனர். ​​

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஜோகன் திடீரென மாயமானான். இதையடுத்து அவனது தாய் சில்ஜா, அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகுதி வரை அவரைக் கண்டுபிடிக்க முடியாத அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறுவனின் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பினர், சிறுவனைக் கண்டுபிடிக்க நெட்டிசன்களின் உதவியை நாடினர். இதற்கிடையே சிறுவன் கிடைக்காததால் அவனது தாய் சில்ஜா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், கிராமத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை அறிந்து கொண்டனர். மேலும் சிறுவன் கிராமத்தில் இருப்பதை உறுதி செய்தனர். சிறுவன் அணிந்திருந்த தங்கச் சங்கிலிக்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் கடத்திச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் சந்தேகமடைந்தனர். பின்னர் தீவிர விசாரணைக்குப் பின்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா (27) என்ற பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது அங்கிருந்த பீரோவும் உடைந்தது. அதில், அந்த சிறுவனின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுவனின் உடல் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பாத்திமா ஜோஹனை கொலை செய்து அவரது 1.4 சவரன் தங்கச் சங்கிலியை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, மணவாளக்குறிச்சி காவல் துறையினர் வெள்ளிக்கிழமை பதிவு செய்த காணாமல் போன வழக்கை சனிக்கிழமை கொலை வழக்காக மாற்றி, பாத்திமாவைக் கைது செய்துள்ளதாக கொளச்சல் டிஎஸ்பி தங்க ராமன் தெரிவித்தார்.

பாத்திமா தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்தார், மேலும் ஜோகனின் குடும்பத்திற்கு நன்கு பழக்கமானவர். பாத்திமா கிராம மக்கள் பலரிடம் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

விசாரணையில், வெள்ளிக்கிழமை மதியம் பாத்திமாவின் வீட்டின் முன் ஜோகன் விளையாடிக் கொண்டிருந்தான். அந்தப் பெண் அவனை உள்ளே அழைத்தாள், இந்த அத்தையை நன்றாகத் தெரியும் என்பதால் அவன் உள்ளே சென்றுள்ளான். அவள் அவனுடைய சங்கிலியைப் பறித்தபோது அவன் குரலை எழுப்ப முயன்றுள்ளான், அந்தப் பெண் அவனை இறுகப் பிடித்ததால், சிறுவன் அசையாமல் போனான். இதையடுத்து அந்த பெண் சிறுவனை கட்டி வைத்து உடலை அலமாரியில் மறைத்து வைத்துள்ளார். அவள் வீட்டிலிருந்து உடலை மீட்ட பிறகு தான் குற்றத்தை ஒப்புக்கொண்டாள் என்று டிஎஸ்பி கூறினார்.

இந்த குற்றத்தில் அவரது உறவினர்கள் அல்லது வேறு யாருக்காவது பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment