Advertisment

பொங்கி வழியும் குமரியின் குற்றாலம்.. திற்பரப்பில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் விழும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanyakumari received heavy rainfall flooding in Thirparappu waterfalls

திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெருமகிழ்ச்சில் அதில் குளித்து மகிழ்கின்றனர்.

Advertisment

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த பெரும் மழை காரணமாக பேச்சிப்பாறை, கோதையார், சிற்றார், மணலோடை, சுருளோடு, மணலோடை, சுருள கோடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, களியல், நெட்டா இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக திற்பரப்பு அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. திற்பரப்பு அருவி இயற்கையானது அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றாலும் காட்சிக்கு இயற்கை அருவி போல் கட்சி அளிக்க காரணம் சுற்றியிருக்கும் பசுமை நிறைந்த இயற்கை பகுதிகளே ஆகும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் விழும். தற்போது அருவிகளில் தண்ணீர் அதிகமாக விழுவதால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment