Advertisment

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுப்பு - டெல்லி கோர்ட்

சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

author-image
WebDesk
New Update
Karti Chidambaram , Karti Chidambaram visa scam case, கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் மனு தள்ளுபடி, டெல்லி கோர்ட், சீனர்கள் விசா முறைகேடு, விசா முறைகேடு, Karti Chidambaram bail, Tamil Indian express news

சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

Advertisment

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப. சிதம்பரம் 2011 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தபோது 263 சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குனரகம் பதிவு செய்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் கார்த்தியின் மனுவை விசாரணைக்கு அனுமதிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் 2011 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்தபோது 263 சீனர்களுக்கு விசா வழங்கியது தொடர்பான முறைகேட்டில், கார்த்தி உள்ளிட்ட பலருக்கு எதிராக அமலாக்கத்துறை இயக்குநரகம் சமீபத்தில் பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், இதே வழக்கில் சிபிஐயின் சமீபத்தில், முதல் தகவல் அறிக்கையை கவனத்தில் கொண்டு மத்திய அரசு தனது வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Delhi Congress Enforcement Directorate Karti Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment