ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்துக்கு 5 நாள் சிபிஐ காவல்!

கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஒருநாள் காவல் முடிந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது சிபிஐ!

கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக ஒருநாள் காவல் முடிந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது சிபிஐ!

கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன்! ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த 2007-2008 காலகட்டத்தில் மும்பையை தளமாகக் கொண்ட ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடு பெற சட்டத்திற்கு புறம்பாக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாக சிபிஐ.யும் அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார். கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், நேற்று காலையில் சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவரை நேற்று மாலையில் டெல்லி பாட்டியாலா வளாக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ஒரு நாள் சிபிஐ காவலுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.

கார்த்தி சிதம்பரத்தின் ஒருநாள் காவல் முடிந்து இன்று மாலை மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இது தொடர்பான LIVE UPDATES

மாலை 06.40 : கார்த்தி சிதம்பரத்தை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், வரும் மார்ச் 6ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை, சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

மாலை 6.00 : ‘ஐ.என்.எக்ஸ். மீடியாவின் மீது புகார் எழுந்ததும், 2013-ல் அது தொடர்பாக மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சகத்தை அது தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டதே ப.சிதம்பரம்தான். அவரே அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துவிட்டு, அவரே தனது மகனுக்கு உதவும்படியும் கேட்டிருக்க முடியுமா?’ என கார்த்தியின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.

மாலை 5.00 : நீதிமன்ற வளாகத்தில் கார்த்திக்கு அவரது தந்தை ப.சிதம்பரம் ஆறுதல் கூறினார். ‘தைரியமாக இரு’ என குறிப்பிட்டார் அவர்.

மாலை 4.35 : கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றும் பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் தள்ளி வைத்தது.

மாலை 4.30 : கார்த்தியின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘இந்த நிமிடம் வரை கார்த்திக்கு சம்மன்கூட அனுப்பவில்லை. பிறகு எப்படி அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ கூற முடியும்? அவரை சிபிஐ கஸ்டடி எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை’ என்றார்.

மாலை 4.20 : கார்த்தி சிதம்பரம் வழக்கை கவனிக்க அவரது தந்தை ப.சிதம்பரம், தாயார் நளினி சிதம்பரம் ஆகியோரும் நீதிமன்றம் வந்தனர். கார்த்தி தரப்பில் இன்றும் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.

Karti P.Chidambaram On CBI Custody, Delhi CBI Court

கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் வந்த ப.சிதம்பரம்

மாலை 4.15 : ‘கார்த்திக்கும் அட்வாண்டேஜ் ஸ்ட்ரட்டஜிக் நிறுவனத்திற்கும் உள்ள தொடர்புக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கும் அட்வாண்டேஜ் நிறுவனத்திற்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தொடர்பான இ மெயில்கள், இன்வாய்ஸ்கள் ஆகியவற்றை கைப்பற்றியிருக்கிறோம். எனவே இந்த வழக்கில் கார்த்திக் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறது’ என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

மாலை 4.15 : ‘புதன்கிழமை முழுவதும் கார்த்தியை காவலில் எடுத்து எந்த பிரயோஜனமும் இல்லை. அவரது மருத்துவ பரிசோதனையை தொடர்ந்து, மருத்துவர்கள் அவரை இருதய கண்காணிப்பு பிரிவுக்கு மாற்றிவிட்டனர். முன்னதாக அன்று பகல் முழுவதும் எங்களிடம் கார்த்தி இதய பிரச்னை தொடர்பாக எந்தப் புகாரும் கூறவில்லை’ என சிபிஐ தரப்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.

மாலை 4.05 : சிபிஐ தரப்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராவதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.

மாலை 4.00 : டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இன்று செசன்ஸ் நீதிபதி சுனில் ராணா முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close