Advertisment

சரித்திரம் ஆன சாதனை நாயகன்... வரலாறு பேசும் கருணாநிதியின் மேடைப் பேச்சு!

கைத்தட்டல்களும், விசில் சத்தங்களும் அரங்கத்தையே ஆட்டி வைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாநிதி

karunanidhi 97 birthday : கலைஞர் என்ற மூன்றெழுத்து நாயகன் சரித்திர நாயகனான கதை தமிழகமே அறிந்த ஒன்று. தமிழக அரசியல் தலைவர்களில் கலைஞர் கருணாந்தி காலம் என்பது வரலாற்றில் அவ்வளவு எளிதாக மறைந்து விடாது. ‘முத்துவேல் கருணாநிதி’ அவரின் முழுப்பெயரை விட கலைஞர் என்பது தான் அனைவருக்கும் பரீட்சையமான ஒன்று. 50 ஆண்டுகள் அரசியல் வரலாற்றில் ஒரு வலிமையான சக்தியாக அனைவராலும் உணரப்பட்டவர்.

Advertisment

அவருடைய கரகர குரலில் “என் உயிருக்கும் உயிரான உடன்பிறப்புகளே” என்ற வார்த்தைகளை மீண்டும் கேட்க இயலுமா என்றால் சாத்தியம் இல்லை. ஆனால் அவரின் புகழ் இன்னும் எத்தனையோ தலைமுறைகளை தாண்டி பேசப்படும் என்பதில் ஐயளவும் சந்தேகமில்லை.தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார் கலைஞர் என்றால் அதில் மாற்றுக்கருத்தும் இல்லை.

நாளை (ஜூன் 3) மறைந்த கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.இந்நிலையில் எத்தனை முறை கேட்டாலும் சரி படித்தாலும் சரி சிறிதும் சளிக்காத கலைஞரின் சொற்பொழிவுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இங்கே நினைவுக்கூர்கிறது.

karunanidhi 97 birthday: மறக்க முடியாத நட்பு!

1939 ஆம் ஆண்டு கலைஞரின் முதல் சொற்பொழிவு அவரின் பள்ளியில் அரங்கேறியது. ‘நட்பு’ என்ற தலைப்பில் கருணாநிதி பேசினார். அப்போது அவர் எட்டாம் வகுப்பு மாணவன். கூடவே விடுமுறை நாட்களின் தனது நண்பர்கள் , பள்ளி மாணவர்களுக்கு பேச்சுக் கலை பயிற்சியும் அளித்தார். அங்கே தொடங்கிய அவரின் முதல் தேடல்.

மேடைப்பேச்சில் கருணாநிதிக்கு நிகர் அவரே. “இதயத்தைத் தந்திடு அண்ணா..” கலைஞரின் கைவண்ணத்தில் வெளியான இந்த கவிதை மடல் அப்படியே நாடகமானது. தனக்கென ஒரு தனித்த பாணியைக் கலைஞர் கருணாநிதி அமைத்துக் கொண்டார்.

பராசக்தியின் நீதிமன்ற காட்சியில் மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் அரசியல் பேசும். மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி பராசக்தி என அன்றைய சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக கருணாநிதி இருந்தார்.

கலைஞர் எந்த மேடையில் பேசினாலும் அதில் மறக்காமல் தமிழ்ப் பற்று, திராவிட உணர்வு, சாதி ஏற்றத் தாழ்வின்மை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூக செயல்பாடுகள் குறித்து கண்டிப்பாக பதிவு செய்து விடுவார். கலைஞரின் மேடை பேச்சை கேட்கவே திரளான கூட்டம் கூடும். கைத்தட்டல்களும், விசில் சத்தங்களும் அரங்கத்தையே ஆட்டி வைக்கும். அரசியலில் இல்லாத சினிமா பிரபலங்கள் கூட கலைஞரின் மேடை பேச்சை கேட்க கூட்டத்திற்கு வருவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment