Advertisment

கருணாநிதி பிறந்த நாள் : கனிமொழி கவிதை

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாநிதி பிறந்த நாள் : கனிமொழி கவிதை

திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக மகளிரணி செயலாளரும், திமுக மாநிலங்களவைக் குழு தலைவருமான கனிமொழி, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கவிதை:

Advertisment

மெளனம்

பேசுவதை நிறுத்திக் கொண்டாய்

உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது

என்று நினைத்துவிட்டாயா?

பேசி பேசி அலுத்துவிட்டதா?

சொல்வதற்கு இருந்ததை எல்லாம்

சொல்லிவிட்டேன் என்றா?

உன் வார்த்தைகளின் எஜமானர்கள்

நாங்கள் என்று உனக்குத் தெரியாதா

publive-image

மெளனம் கனத்துக் கிடக்கிறது

எங்கள் பாதையை அடைத்துக் கிடக்கும்

அசைக்க முடியாத பாறையாய்,

வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின்

வரப்பில், செய்வது அறியாது

நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல

நாங்களும் காத்துக் கிடக்கிறோம்

கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக.

கடல் பிளந்து மறூகரை சேர்கிறேன் என்ற

கிழவனை, பறித்துச் சென்றது யார்?

உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்...

வண்டியில் இருந்து இறங்கி நீ

வீசும் சினேகப் புன்னகை...

அதற்குப் பின்னால் எப்போதும்

ததும்பும் நகைச்சுவை...

மேடையில் இருந்து, ‘உடன்பிறப்பே’ என்று

அழைக்கும் போது ஒரு கோடி

இதயங்கள் ஒரு வினாடி உறைந்து

துடிக்குமே அந்தக் கணம்...

இதற்கு மாற்றாய் எதைத் தருவாய்,

நாளை முதல் சூரியன் உதிக்காது

என்றால் இந்த பூமி எப்படி சுழலும்.

publive-image

எங்கள் கேள்விகளாய், தேடும் பதிலாய்

சிந்தனையாய், சிந்தனையின் ஊற்றாய்,

மொழியாய், மொழியின் பொருளாய்,

செவிகளை நிறைந்த ஒலியாய்,

குரலாய் இருந்தது நீ.

எங்களோடு தானே எப்போதும்

இருப்பாய், இருந்தாய்

திடீர் என்று எழுந்துபோய் கதவடித்துக்

கொண்டால் எப்படி?

உன் நாவை எங்களுக்கு வாளாக

வடித்துக் கொடுத்தாய்

அதைப் புதுப்பொலிவு மாறாமல்

பாதுகாத்து வைத்திருக்கிறோ...

இருண்மையும் எதிர்களும் சூழ்ந்த

நேரத்தில் எங்கள் தோள்அளின் மீது

ஏறி படை நடத்திட காத்திருக்கிறோம்...

நீயோ, போதி மரத்து புத்தனைப் போல்

அமைதி காக்கிறாய்.

உன் ஆளுமையை துவேஷித்தவர்கள்

வசை பாடியவர்கள்

தமிழ் வாழ்வின் தாழ்வுகளுக்கெல்லாம்

நீயே காரணம் என்றவர்கள்

எல்லோரும் இன்று

காத்துக் கிடக்கிறார்கள் எங்களோடு,

புழுதிக் காற்று வீசும் திசையறியா காட்டில்

தெளிந்த தடம் காட்டும் உனது

சில வாக்கியங்களுக்காக,

publive-image

நீ பேசுவதில்லை

ஆனால் நாங்கள்

உன்னைப் பற்றியே தான்

பேசிக் கொண்டிருக்கிறோம்

வா,

வழியெங்கும் பூத்துக் கிடக்கிறது

நீ வருவாய் எனற நம்பிக்கை...

நீயின்றி இயங்காது எம் உலகு.

Kanimozhi Poem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment