திமுக தலைவர் கருணாநிதி, தனது கொள்ளுப்பேரன் திருமணத்தை இன்று காலை நடத்தி வைத்தார். ஓராண்டுக்குப் பின்னர் தன் குடும்ப நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதால், கோபாலபுரம் இல்லம் களை கட்டியுள்ளது.
Advertisment
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து. இவருடைய மகள் வழி பேரன் மனோ ரஞ்சிதுக்கும், நடிகர் விகரமின் மகள் அக்சிதாவுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்காக கோபாலபுரம் வீடு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு மணமக்கள் இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர்.
அவர்களுக்கு கருணாநிதி திருமணம் செய்து வைத்தார். பகுத்தறிவு முறையில் இந்த திருமணம் நடந்தது.
கருணாநிதியின் வீட்டில் திருமணம் நடந்ததால், உறவினர்கள் தவிர வேறு யாரும் அழைக்கப்படவில்லை. திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மனைவி சாந்தா, ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி., செல்வி, மு.க. தமிழரசு உள்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
Advertisment
Advertisements
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் சென்றுவிட்டதால் அவர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
கருணாந்தி குடும்பத்தைச் சேராத கவிஞர் வைரமுத்து மட்டும் திருமணவிழாவில் கலந்து கொண்டார். திருமணம் முடிந்து திரும்பிய கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் பேசும் போது, ‘’திருமணத்தை நடத்தி வைக்கும் அளவுக்கு கருணாநிதி தேறி வருவது மகழ்ச்சி அழிக்கிறது. கருணாநிதி நலமுற்று இருக்கிறார் என்றால், தமிழ்நாடு நலமுற்று இருக்கிறது என்று அர்த்தம். அவர் நலிவுற்று இருக்கிறார் என்றால், தமிழகம் நலிவுற்று இருக்கிறது என்று அர்த்தம். மணமக்களை வாழ்த்தும் அதே நேரத்தில், திமுக தலைவர் கருணாநிதி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்துகிறோம்’’ என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு அக்டோபம் மாதம் உடல் நலம் சரியில்லாததால், ஒய்வு பெற்று வந்தார். அவரை கட்சிக்காரர்கள் சந்திப்பதும் குறைந்து போனது. அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் முரசொலி பவளவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியதை பார்வையிட்டார். ஓராண்டுக்கு பின்னர் அவர் வீட்டுக்கு வெளியே வந்தது அன்றுதான்.
இதையடுத்து இன்று காலை குடும்ப திருமண விழாவில் அவர் கலந்து கொண்டது, குடும்பத்தினர் மட்டுமல்லாது, திமுக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் கருணாநிதி திமுக தலைமை அலுவலகமான, அறிவாலயத்துக்கு விரைவில் வருவார் என்று தெரிகிறது.