Advertisment

வெறிச்சோடிய சென்னை : கடைகள் அடைப்பு.. பேருந்துகள் ஓடவில்லை!

தியாகராய நகர், கோயம்பேடு மார்கெட் மற்றும் பஸ் நிலையம் போன்ற இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி இன்று(8.8.18) தமிழகத்திற்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரம் ஆளநடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisment

பொதுவிடுமுறை:

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று(7.8.18) காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

கருணாநிதியின் மறைவை ஒட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாவண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கருணாநிதி மறைவையொட்டி இன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தெருக்களில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பலரும் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கில் குவிந்து வருகின்றனர்.

பொது விடுமுறை திரையரங்கில் காட்சிகள் ரத்து

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளத. காலை முதல் இரவு வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கும் சென்னை தியாகராய நகர், கோயம்பேடு மார்கெட் மற்றும் பஸ் நிலையம் போன்ற இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

 

பொது விடுமுறை தியாகராய நகர்

வெளியூர் செல்பவர்களும் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் கடுமையான சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையை தவிர காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் பங்குகள் மாலை 6 மணி வரை திறக்கப்படாது. திரையரங்குகளிலும் இன்று அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றத்தில் திமுக வாதம்

Dmk Marina Beach M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment