மருத்துவர்கள் கண்காணிப்பில் கருணாநிதி: '21 தொண்டர்கள் மரணம் துயரம் அளிக்கிறது’- மு.க.ஸ்டாலின்

DMK Chief Karunanidhi Health Today: சுயநினைவுடன் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

M Karunanidhi Health UPDATES:காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு 5ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ஆம் தேதி நள்ளிரவில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு 5 வது நாளாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க நாள்தோறும் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று சென்னை வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து  கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

நேற்று இரவு 9 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கருணாநிதி உடல் நலம் பெறுவதற்கு இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டார்.

karunanidhi health, m karunanidhi, karunanidhi health today news, dmk chief karunanidhi, karunanidhi at kauvery hospital, kalaignar karunanidhi

DMK Chief M Karunanidhi Health News Today:கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனை அருகேயுள்ள மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்

Kalaignar Karunanidhi Latest News, DMK Chief M Karunanidhi Health News Today: கருணாநிதி உடல்நிலை UPDATES

05:15 PM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

04:45 PM: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற கோரி பெண் ஒருவர் காவேரி மருத்துவமனை முன்பாக தேங்காய் உடைத்து வேண்டுதல் நடத்தினார்.

2:40 PM: காவேரி மருத்துவமனை முன்பு தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை ஊர் திரும்பும்படி ஸ்டாலின் கூறியபிறகும், பெரும்பாலான நிர்வாகிகள் தினமும் காவேரி மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்கள்.

1:10PM: நடிகர் விவேக் வருகை தந்து கருணாநிதியை நலம் விசாரித்தார். விரைவில் குணம் அடைய தனது வாழ்த்துகளை தெரிவித்து பேட்டி அளித்தார்.

12:30 PM: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார். திமுக.வினர் யாரும் தங்களை மாய்த்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடவேண்டாம்’ என கேட்டுக்கொண்டிருக்கிறார்.

12:00 PM:  த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தார். ‘கருணாநிதி விரைவில் பூரண நலத்துடன் திரும்புவார்’ என வாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

11:30 AM : திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற திருவாரூரில் அவரது தாயார் அஞ்சுகம் அம்மாளின் நினைவிடத்தில் ஏராளமான மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை

11.:00 AM: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்

10.:40 AM: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய்

M Karunanidhi Health News Today: ஸ்டாலின் மற்றும் உதய்நிதி ஸ்டாலினுடன் நடிகர் விஜய்

10:30 AM: காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நடிகர் விஜய் நலம் விசாரிப்பு ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் நடிகர் விஜய்

M Karunanidhi Health News Today: நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு வந்த போது

10:15 AM: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு செல்கிறார் நடிகர் விஜய்.

10:00 AM:  காவேரி மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. சுயநினைவுடன் திமுக தலைவர் கருணாநிதி இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவலால் தொண்டர்கள் மகிழ்ச்சி.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close