Advertisment

கருணாநிதி ஹெல்த் கிராஃப்: இதுவரை வெளியான 6 அறிக்கைகளில் கூறியது என்ன?

Karunanidhi health Report: கருணாநிதி உடல்நிலை தொடர்பான 6 மருத்துவ அறிக்கைகளும் கடந்த 10 நாட்களில் அவரது உடல்நிலை ஏற்ற இறக்கங்களை கூறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK Chief M. Karunanidhi health Report, kauvery hospital, chennai, Karunanidhi health news in Tamil:

DMK Cheif M. Karunanithi health condition in kauvery hospital:

Karunanidhi Health Report: கருணாநிதி ஜூலை 28-ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு செல்லும்போது இவ்வளவு சீரியஸாக இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த 10 நாட்களில் 6 மருத்துவ அறிக்கைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் சொல்வது என்ன?

Advertisment

திமுக தலைவர் கருணாநிதி 2016 இறுதியில் தொண்டையில் டிரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதையொட்டி அவரது தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டது. கடந்த ஜூலை 18 வரை அவரது உடல் நிலையில் பெரிதாக பிரச்னைகள் இல்லை .

Karunanidhi Health News Today, DMK Chief M Karunanidhi Health, கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES

ஜூலை 18-ம் தேதி தொண்டையில் பொருத்தப்பட்ட குழாயை காவேரி மருத்துவமனை சென்று மாற்றினார் கருணாநிதி. அதன்பிறகு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் ஜூலை 26-ம் தேதிதான் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிக்கை வெளியானது.

Karunanidhi Health Report: காவேரி மருத்துவமனை வெளியிட்ட கருணாநிதி மருத்துவ அறிக்கைகள்

கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஜூலை 26 முதல் 6 அறிக்கைகள் வெளியாகி உள்ளன. அந்த மருத்துவ அறிக்கைகள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்!

1. லேசான பின்னடைவு என கூறிய காவேரி மருத்துவமனை: ஜூலை 26-ம் தேதி இரவு 7 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதி உடல்நிலையில் அவரது வயது மூப்பு பிரச்னைகளால் லேசான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital: லேசான பின்னடைவு என கூறிய காவேரி மருத்துவமனை

சிறுநீரகப் பாதை நோய் தொற்று காரணமாக ஏற்பட்ட காய்ச்சலுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது வீட்டிலேயே அவருக்கு மருத்துவமனை கவனிப்பு வழங்கப்படுகிறது. மருத்துவ மற்றும் நர்ஸிங் நிபுணர்களால் 24 மணி நேரமும் அவர் கண்காணிக்கப்படுகிறார்.

கருணாநிதியின் மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு, பார்வையாளர்களை கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது’ என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.

2.ரத்த அழுத்தக் குறைவும், மருத்துவமனை அனுமதியும்: ஜூலை 28-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி.

DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital: ரத்த அழுத்தக் குறைவும், மருத்துவமனை அனுமதியும்

அப்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது ரத்த அழுத்தம் சரி செய்யப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்’ என தெரிவிக்கப்பட்டது.

3.உடல்நிலை சீரானது என அறிக்கை: ஜூலை 28-ம் தேதி இரவு 8 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதி உடல்நிலை மருத்துவ உதவியுடன் சீராக இருக்கிறது. டாக்டர் குழுவால் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்’ என தெரிவிக்க

DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital: உடல்நிலை சீரானது என அறிக்கை

ப்பட்டது.

4.மூச்சுத் திணறலில் கருணாநிதி: அடுத்த நாளே பின்னடைவு: 29-ம் தேதி காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அன்று இரவு 9 மணிக்கு காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கருணாநிதியின் உடல்நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மருத்துவ உதவியால் அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை சரி செய்து வருகிறோம். டாக்டர்கள் குழுவின் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என வெளியிடப்பட்டது.

DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital: மூச்சுத் திணறலில் கருணாநிதி

5.மீண்டும் சீரானது என அறிக்கை: ஜூலை 31-ம் தேதி வெளியான மருத்துவ அறிக்கையில் என்ன காரணத்திற்காக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரோ, அது குனப்படுத்தப்பட்டாலும் வயது மூப்புப் பிரச்னைகள் காரணமாக மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது’ என குறிப்பிடப்பட்டது.

DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital : மீண்டும் சீரானது என அறிக்கை

6.ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி: காவேரி மருத்துவமனையின் 6-வது அறிக்கை ஒரு வார இடைவெளிக்கு பிறகு ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியானது. அதில், ‘திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் மருத்துவ நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவரது வயது மூப்பு பிரச்னைகள் காரணமாக, அவரது முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலான பணியாக தொடர்கிறது.

DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital DMK Chief M. Karunanidhi health condition in kauvery hospital: ஆபத்தான கட்டத்தில் கருணாநிதி

தொடர்ச்சியான கண்காணிப்பிலும், முறையான மருத்துவ உதவி மூலமாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே முன்னேற்றத்தை முடிவு செய்ய முடியும்’ என கூறப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10-வது நாளில் கருணாநிதியின் உடல்நிலை மோசமான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Dmk M Karunanidhi Cauvery Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment