DMK Chief Karunanidhi Health: கருணாநிதியின் 10 நாள் காவேரி மருத்துவமனை வாசம் ஏற்ற, இறங்கங்களுடன் அமைந்தது. உடல்நிலையில் முன்னேற்றம், பின்னடைவு என அடுத்தடுத்து நிகழ்ந்தன.
கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 28ம் தேதி, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல் மீண்டும் இயக்கம் பெற்று நிலையானது.
DMK Chief Karunanidhi 10 days life at kauvery hospital, Chennai: காவேரியில் உடல்நிலை ஏற்ற இறக்கம்
மொத்த மீடியாவும் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து கிடக்க, கருணாநிதியின் உடல்நிலை தேசிய செய்தி ஆனது.ஆனால், 29ம் தேதி, கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. இந்தச் செய்தி மெல்ல மெல்ல சமூக தளங்களில் பரவ, மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, திரண்ட தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது.
Karunanidhi Health : மருத்துவமனையில் இருந்து திருநாவுக்கரசர் பேட்டி To Read, Click Here
உடன்பிறப்பே! உடன்பிறப்பே! எழுந்து வா உடன்பிறப்பே!
எழுந்து வா! எழுந்து வா! எங்கள் தலைவா எழுந்து வா!
எழுந்து வா! எழுந்து வா! காவேரியை விட்டு எழுந்து வா!
என்ற உடன்பிறப்புகளின் கோஷங்கள் அதிர்ந்தது.
இருப்பினும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அன்றிரவு வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை சீரான நிலைமைக்கு வருவதாகவும், வயது காரணமாக, அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்தே சிகிச்சை பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 30ம் தேதி மருத்துவமனைக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேரடியாக கருணாநிதி சிகிச்சை பெறும் அறைக்கே சென்று அவரை சந்திக்க, அந்த புகைப்படம் வெளியானது. அதில் கருணாநிதி சிகிச்சை பெறும் காட்சி இடம்பெற, தொண்டர்கள் நிம்மதியடைந்தனர்.
தொடர்ந்து, ராகுல் காந்தி வந்த போது, அவரும் கருணாநிதி சிகிச்சை பெறும் அறையில் நேரடியாக சென்று உடல்நலம் விசாரித்தது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில், கலைஞர் கருணாநிதியின் முகம் தெளிவாக தெரிந்தது. அவர் கண் திறந்து பார்ப்பது போன்றும் அந்த புகைப்படம் இருந்தது. இதனால், தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், காவேரி மருத்துவமனை நிர்வாகமே, கருணாநிதியின் உடல்நிலை சீராகிக் கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்பிறகு, எந்தவித பரபரப்புமின்றி கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தார். தேசியக் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் உட்பட திரை பிரபலங்கள் என திரளானோர் வந்து தினம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துச் செல்கின்றனர்.
நேற்று (ஜூலை 5), நாட்டின் முதல் குடிமகனும், ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்த், நேரடியாக மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்து சென்றார். 'நாட்டின் ஜனாதிபதியே, எங்கள் தலைவரை நேரில் வந்து சந்தித்து செல்கிறார்' என திமுகவினர் பெருமிதம் கொண்டனர்.
இன்றோடு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. கடந்த நான்கு நாட்களாக காவேரி மருத்துவமனை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், கருணாநிதிக்கு கல்லீரல் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்திக்கிறது. இது குறித்து மருத்துவமனை தரப்பில் அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கவில்லை.
எனினும் திமுக முக்கிய நிர்வாகிகள் மூலமாகவே இந்தத் தகவல் கட்சி நிர்வாகிகளிடம் பரவியிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் பலரும் இதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்தபடி இருக்கிறார்கள்.