Advertisment

நெகிழ்ச்சி வீடியோ: சிறுமியிடம் தான் யார் என்று கேட்கும் கருணாநிதி!

கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெகிழ்ச்சி வீடியோ: சிறுமியிடம் தான் யார் என்று கேட்கும் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி, சிறுமி ஒருவரிடம் சைகளில் பேசி விளையாடும் வீடியோ ஒன்று  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

கடந்த சில மாதங்களாக  திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறது.  அவரை அவ்வப்போது கமல், ரஜினி, மூத்த அரசியல் தலைவர்கள் பலர் நேரில் பார்த்த்யு உடல்நலம் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் திமுக செயல்தலைவர்,  ஸ்டாலின் தனது பிறந்த நாள் அன்று,  கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசிப் பெற்றார். அன்றையன் தினமே,  நடிகரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்து பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

பேரக்குழந்தைகளை கொஞ்சுவது, கிரிக்கெட் விளையாடுவது என அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் மூலம், கலைஞர் உடல் நலம் தேறி வருவது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. மீண்டும் பழைய உற்சாகத்துடன், கலைஞரை வீடியோவில் பார்த்த திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

அதன் பின்பு, அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சமீபத்தில், கலைஞர் அண்ணா அறிவாலயம் மற்றும் முரசொலி அலுவலகங்களுக்கு  சென்றார்.  இந்நிலையில், கலைஞர் கருணாநிதி சிறுமியுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், “பெண் ஒருவர் தனது 5 வயது மகளுடன் கருணாநிதியிடம் ஆசிப் பெறுவதற்கு அவரின் இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் ‘நான் யார் தெரியுமா?’ என கருணாநிதி சைகையில் கேட்க, அக்குழந்தை ‘கலைஞர் கருணாநிதி’ என பதில் கூறுகிறது. இதை கேட்டதும் கருணாநிதி புன்னகை செய்கிறார். அக்குழந்தைக்கு கருணாநிதி கை கொடுத்து வாழ்த்துகிறார்.

நேற்று(28.3.18) மாலை வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், திமுக தொண்டர்கள்  இந்த வீடியோவைக் கண்டு உற்சாகம் அடைந்துள்ளனர்.

நன்றி: சத்யம் டிவி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment