Advertisment

தமுஎகச மாநில பொறுப்பாளர் கருப்பு கருணா மரணம்; தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல்

தமுஎகச-வின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கருணா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karuppu karuna passes away, tamil nadu progressive writers artist association, தமுஎகச, கருப்பு கருணா மரணம், திருவண்ணாமலை, karuppu karunaa, thiruvannamalai

தமுஎகச-வின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கருணா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் கருப்பு கருணா. திருவண்ணாமலையில் பிரம்மாண்டமான கலை இரவுகளை நடத்தியவர்களில் ஒருவர். நாடகக் கலைஞர், குறும்பட இயக்குனர், சமூக ஊடகங்களில் நகைச்சுவை கலந்த கூர்மையான விமர்சனங்களை முன்வைத்தவர் என பன்முகங்களைக் கொண்டவர் கருப்பு கருணார்.

திருவண்ணாமலையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமுஎகசவில் செயல்பட்டு வந்தார். பல நாடகங்களை இயக்கி நடித்தவர். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் பற்றி எழுத்தாளர் பவா செல்லதுரை எழுதிய ஏழுமலை ஜமா என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு கருப்பு கருணா இயக்கிய ஏழுமலை ஜமா குறும்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம். பல விருதுகளையும் வென்றுள்ளது.

தமுஎகசவின் மாநில துணை பொதுச் செயலாளராக செயல்பட்டுவந்தார். கம்யூனிஸ்ட் கட்சியினர், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களால் தோழர் கருப்பு கருணா என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். அவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. 57 வயதான கருப்பு கருணாவுக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

கருப்பு கருணாவின் உடலுக்கு திருவண்ணாமலை சாரோனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தலாம். பொதுமக்கள் அஞ்சலி முடிவடைந்த பிறகு அவருடைய உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.

கருப்பு கருணாவின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர். கருணா அவர்களின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது, வேதனை அளிக்கிறது. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமுஎகசவின் முழுநேர ஊழியராகவும், பன்முக கலை இலக்கிய செயற்பாட்டாளராகவும் செயல்பட்டவர் தோழர் கருணா . மாணவர், வாலிபர் இயக்கங்களில் இணைந்து செயல்பட்ட அவர், தமுஎகசவின் மாநில தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். திருவண்ணாமலையில் துவங்கிய கலை இலக்கிய இரவு என்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் பற்றிப் பரவியது. அந்த வடிவத்தை உருவாக்கியவர்களில் கருணா முக்கியமானவர். நாடகம், குறும்படம் என செயல்பட்ட அவர் சமூக ஊடகங்களிலும் முற்போக்கு கருத்துக்களை தொடர்ந்து எழுதி வந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களில் ஒருவராகவும் திகழ்ந்த தோழர் கருணாவின் மறைவு, தமிழக முற்போக்கு கலை இலக்கியத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமுஎகசவினருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

கருப்பு கருணா மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், தமுஎகச, எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தோழர் கருப்பு கருணா இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

அவர் தமுஎகச மாநில தலைவர்களில் ஒருவர். துடிப்புமிக்க...

Posted by G Ramakrishnan on Sunday, 20 December 2020

கருப்பு கருணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜி.ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “தோழர் கருப்பு கருணா இறந்துவிட்டார் என்ற நெஞ்சை உலுக்குகிறது.

அவர் தமுஎகச மாநில தலைவர்களில் ஒருவர். துடிப்புமிக்க செயல்பாட்டாளர். புத்தாக்க சிந்தனையாளர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். செவ்வஞ்சலி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

என்ன சொல்வது?

தமுஎகசவின் பெருமரம் வீழ்ந்தது.

என் அன்புத் தோழர் கருப்பு கருணா

இன்று காலை பதினொரு மணியளவில்

மறைந்தார்.

எதையும் எழுத மனமில்லை.

Posted by Vasanthan Che Chandru on Sunday, 20 December 2020

த.மு.எ.க.ச துணைப் பொதுச் செயலாளர் தோழர் கருப்பு கருணா

மறைந்தார் என்ற செய்தியை மனம் ஏற்க மறுக்கிறது. நகைச்சுவை மிளிரும்...

Posted by பா. ஜீவ சுந்தரி on Sunday, 20 December 2020

சுமார் பதினேழுமணி நேரத்திற்கு முன்புகூட முகநூலில் இருந்திருக்கிறார். செய்தி அறிந்ததிலிருந்து அவருடைய முகநூல் பக்கத்தை...

Posted by ஸ்டாலின் தி on Monday, 21 December 2020

அய்யோ !

கருப்பு கருணா ...

ஆழ்ந்த இரங்கல்.

Posted by Srinivasan Natarajan on Sunday, 20 December 2020

 

 

Cpm Thiruvannamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment