அறிவாலயத்தில் செந்தில் பாலாஜி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்

Karur V Senthil Balaji: செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கரூரில் இருந்து வந்து அண்ணா அறிவாலய வளாகத்தை நிறைத்தனர்.

Karur V Senthil Balaji Joined With DMK: கரூர் வி.செந்தில் பாலாஜி திமுக.வில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த செந்தில் பாலாஜி அங்கு, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சரான கரூர் வி.செந்தில் பாலாஜி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். அங்கு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மவுனம் காத்த அவர், இன்று (டிசம்பர் 14) பகல் 12 மணிக்கு சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.

Karur V Senthil Balaji At DMK Head Quatress, Anna Arivalayam, செந்தில் பாலாஜி

Senthil Balaji Joined With DMK: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்த செந்தில் பாலாஜி

முன்னதாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பெருமளவில் கரூரில் இருந்து வந்து அண்ணா அறிவாலய வளாகத்தை நிறைத்தனர். இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வந்தபோது, பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுத்தனர். பகல் 12 மணிக்கு செந்தில் பாலாஜி வந்தபோதும் அவரை சூழ்ந்துகொண்டு, ஆரவாரமாக அழைத்துச் சென்றனர்.

Read More: டிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி: மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக பேட்டி

அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் அறைக்கு செந்தில் பாலாஜி சென்றார். அங்கு ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுக.வில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆரம்பகாலத்தில் திமுக.வில் இருந்தவரான செந்தில் பாலாஜி, மதிமுக, அதிமுக, அமமுக என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் திமுக.வுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close