Advertisment

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் 2 மணியளவில்........

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். 70 வயதாகிய அப்துல் ரகுமானுக்கு, சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் 2 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இன்று அதிகாலை காலமானார்.

Advertisment

மதுரையில் 1937-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்த கவிக்கோ, 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கிவந்தவர். தமிழில் கவிதைக் குறியீடுகள்குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள் ஆவர். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். 1974-ஆம் ஆண்டு இவரது முதல் கவிதை தொகுப்பான ‛பால்வீதி' வெளிவந்தது.

1999-ம் வருடம் 'ஆலாபனை' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது வென்ற அப்துல் ரகுமான், தி.மு.க ஆட்சி காலத்தில் வக்பு வாரியத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment