காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, ட்விட்டரில் தனது பெயரை நக்கத் கான் என்று மாற்றி உள்ளார். இந்த பெயர் பாஜகவினர்களுக்காக என்றும் பதிவு செய்துள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பூவின் இயற்பெயரான நக்கத் கான் என்ற பெயரை ட்விட்டரில் கூறி அவரை சிலர் கிண்டல் செய்து வந்தனர். இதற்கு பதில் கூறிய குஷ்பு, 'பாஜகவினர் இப்போதுதான் என் இயற்பெயரை கண்டுபிடித்துள்ளனர். நான் என் இயற்பெயரை என்றுமே மறைத்ததில்லை என்று கூறியதோடு, தன்னுடைய ட்விட்டரில் 'நக்கத் கான்' என்று பெயரை மாற்றி, இந்த பெயர் பாஜகவினர்களுக்கு மட்டும் என்று அதிரடியாக பதிவிட்டுள்ளார்.