கிரண் பேடி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லலாமா?

சட்டத்தை காப்பாற்ற வேண்டிய புதுவை துணை நிலை ஆளுநர் கிரென் பேடி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லலாமா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சட்டத்தை காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் இருக்கும் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லலாமா என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன.

புதுவை துணை நிலை ஆளுநராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி, புதுவை அரசியல்வாதிகளுடன் கடுமையாக மோதி வருகிறார். குறிப்பாக முதல்வர் நாராயணசாமிக்கும் அவருக்கும் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஆரம்பித்து அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வது வரை கிரண் பேடி தலையிடுகிறார். இதனால் அடிக்கடி புதுவையில் பரபரப்பான மோதல்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பகலில் மட்டுமல்ல இரவிலும் கிரண் பேடி வேலை செய்கிறார். நள்ளிரவில் ஒரு பெண்ணின் டூவிலரில் தலையை மூடிக் கொண்டு நகர்வலம் வருகிறார் என்று அவரைப் பாராட்டி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் பரப்பப்பட்டு வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கிரென் பேடி மீது பாயத்தொடங்கியுள்ளனர். துணை நிலை ஆளுநரான அவர் அரசியல்வாதிகளை குறை சொல்லி வருகிறார். ஆனால், அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு காரணம் அவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வதுதான். போலீஸ் டிஜிபியாக இருந்த அவரே இப்படி சட்டத்தை மதிக்காமல் இருக்கலாமா? என்றும் கேட்கின்றனர்.

அந்த புகைப்படம் பற்றி சமூக வலைதள பிரபலங்கள் சிலரிடம் கருத்துக் கேட்டோம். அவர்கள் கருத்துக்கள் :

ப்ரின்கி

நகர்வலம் போனா நாலு பேரு யாருன்னு கண்டுபிடிச்சுற கூடாதுன்னு முகத்த மூடிட்டு போவாங்க.. குறைஞ்சபட்சம் அதுக்காகவாது ஹெல்மட் போட்டுட்டு போகலாம்.. இது நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேனு சொல்லிட்டு போற மாதிரி விளம்பர வலம் மாதிரி தான் தெரியுது.. சரி விடுங்க.. மோடி கிட்டயும் பிஜெபி கிட்டயும் வேற என்னத்த எதிர்பாக்க முடியும்.

ஜெய கணபதி

கொல்லைப்புறமாய் ஆட்சியை பிடிக்க,
அவசரமாய் கிளம்பிய அல்லிராணிக்கு,
தலைக்கவசம் அணிய நேரமில்லையோ,
இல்லை #தான் என்ற அகந்தையா..!

இளஞ்செழியன்
யாருக்கும் தெரியாம போனா தான் நகர்வலம். இது மோடி,பாஜக ஸ்டைல்ல எல்லாருக்கும் தெரியனும்னே போறதுக்கு வழக்கம்போல ஃபோட்டோஷாப்பே பண்ணிருக்கலாம். நாடே ஹெல்மெட் போடாம ரேஸ் ஓட்டுற மாதிரி தான் இருக்கு. நீங்களாது ஹெல்மட் போட்டு போங்க. கிரண் பேடி அவர்களே பொறுப்பான பதவில இருக்கிங்க, ஊர பாக்குறதுக்கு முன்னாடி உங்கள பாத்துக்குங்க.முன்னுதாரனமா இருங்க இதுலயாச்சும்.

பரணி

ஊருக்கு மட்டுமே உபதேசம் ஆனா இவங்க ஹெல்மெட் போடாமல் போவாங்கலாம்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close